×

எஸ்சி, எஸ்டி மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகையில் முறைகேடு தொடர்பாக 52 கல்லூரி முதல்வர்களுக்கு சம்மன்

சென்னை: எஸ்சி, எஸ்டி மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகையில் முறைகேடு தொடர்பாக 52 கல்லூரி முதல்வர்களுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. 2011-2014 வரை எஸ்டி, எஸ்சி பிரிவை சேர்ந்த கல்லூரி மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகையை முறைகேடு என புகார் எழுந்துள்ளது. முறைகேடு குறித்து விசாரணை நடத்த 52 கல்லூரி முதல்வர்களையும் நாளை நேரில் ஆஜராக லஞ்ச ஒழிப்புத்துறை சம்மன் அனுப்பியுள்ளது. கல்வி உதவித்தொகையில் ரூ.17.36 கோடி முறைகேடு நடந்திருப்பதாக லஞ்ச ஒழிப்புத்துறை ஏற்கனவே வழக்குப்பதிவு செய்துள்ளது. பாலிடெக்னிக், கலை மற்றும் அறிவியல், பொறியியல், மருத்துவம் உள்ளிட்ட 52 கல்லூரிகளில் முறைகேடு நடந்திருப்பதாக தணிக்கை துறை அறிக்கை அளித்துள்ளது.

அதிமுக ஆட்சியில் இருந்த போது 2014- 2018 வரை எஸ்சி, எஸ்டி மாணவர்களுக்காக ஒதுக்கப்பட்ட கல்வி உதவித்தொகையில் மிகப்பெரிய முறைக்கேடு நடந்திருப்பதாக வழக்கறிஞர் அசோக்குமார் என்பவர் புகார் அளித்திருந்தார். இந்த புகாரின் அடிப்படையில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சில நாட்களுக்கு முன்பாக வழக்குப்பதிவு செய்திருந்தனர். ரூ.17,36,30,369 மாணவர்களுக்கு அளிக்க வேண்டிய இந்த உதவித்தொகை என்பது முறைகேடு செய்யப்பட்டிருப்பதாக புகார் அளித்திருந்தார். குறிப்பாக இதற்காக வைக்கப்பட்டிருந்த தணிக்கை துறையின் மூலம் கிடைக்கப்பெற்ற அறிக்கையை அடிப்படையாக வைத்து இந்த புகாரை அளித்திருந்தார். இந்த புகாரின் அடிப்படையில், இதில் பல்வேறு ஆதிதிராவிடர் நலத்துறையை சேர்ந்த அதிகாரிகளும், கல்வித்துறை அதிகாரிகளும் 52க்கும் மேற்பட்ட பாலிடெக்னிக், கலை அறிவியல், மருத்துவம், பொறியியல் சார்ந்த கல்லூரிகளை சேர்ந்த பல கல்லூரி நிர்வாகங்கள் தொடர்பு இருப்பதாக லஞ்ச ஒழிப்புத்துறை தனது முதல் தகவல் அறிக்கையில் தெரிவித்திருந்தது.

அந்த அடிப்படையில் இந்த வழக்கில் தொடர்புடைய 52 கல்லூரிகளின் முதல்வர்களுக்கு லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர். இந்த முறைகேடு தொடர்பாக விரிவான விசாரணை நடத்துவதற்காக ஒவ்வொரு கல்லூரி முதல்வரையும் அழைத்து விசாரணை நடத்தப்பட இருக்கின்றனர். 10 வகையான முறைகேடுகள் நடந்துள்ளன. பெரம்பலூரில் இல்லாத ஒரு கல்லூரிக்கு ரூ.58 லட்சம் அளவிற்கு இந்த நிதியானது ஒதுக்கப்பட்டுள்ளது. வெளிமாநிலத்தை சேர்ந்தவர்களுக்கு இந்த நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. எஸ்.சி, எஸ்.டி அல்லாதவர்களுக்கு இந்த நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு 10 வகையான முறைகளில் இந்த முறைகேடு தொடர்பாக தற்போது லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர்.

Tags : Sc , Scholarships, abuse
× RELATED சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும்; 50...