தமிழக மீனவர்கள் 55 பேர் கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து மக்களவையில் திமுக எம்பிக்கள் முழக்கம்!!

டெல்லி : தமிழக மீனவர்கள் 55 பேர் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து மக்களவையில் தமிழ்நாட்டு உறுப்பினர்கள் பதாகைகளை ஏந்தியபடி சபாநாயகர் இருக்கையை முற்றுகையிட்டு முழக்கங்களை எழுப்பினர். தமிழக மீனவர்கள் 55 பேர் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தை நாடாளுமன்றத்தில் திமுக கூட்டணி உறுப்பினர்கள் கொண்டு வந்தனர்.

மக்களவையில் சபாநாயகர் இருக்கையை முற்றுகையிட்ட அவர்கள், மீனவர்களை விடுவிக்க வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர். இலங்கை கடற்படையை கண்டித்தும் மீனவர்களை விடுவிக்க வலியுறுத்தியும் முழக்கங்கள் எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தி அவர்கள் முழக்கமிட்டனர்.இதே போல் லக்கிம்பூர் விவசாயிகள் படுகொலை விவகாரத்தில் ஒன்றிய இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவை பதவி நீக்கம் செய்ய கோரியும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பதாகைகளை ஏந்தி முழக்கமிட்டனர்.இதனால் அவை நடவடிக்கைகள் சிறிது நேரம் ஒத்திவைக்கப்பட்டது.

Related Stories: