கூடங்குளம் அணுமின் நிலையத்தில் வெளிமாநிலத்தவர்களுக்கு பணி தந்ததை கண்டித்து உள்ளூர் மக்கள் போராட்டம்..!!!

தூத்துக்குடி: கூடங்குளம் அணுமின்நிலையத்தில் உள்ளூர் மக்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்க வேண்டுமென்ற ஒரே கோரிக்கையை முன்னிறுத்தி 1000- க்கும் மேற்பட்ட மக்கள் முற்றுகை போராட்டம் நடத்திவருகின்றனர். நேற்று, கூடங்குளம் அணுமின்நிலையத்தில் 2 ஆண்டுகளுக்கான பொறியாளர் ஒப்பந்த பணிக்கான தேர்வு நடைபெற்றதை அடுத்து, 34 பேர் நேரிடையான தேர்வுக்கு இன்றும், நாளையும் அழைக்கப்பட்டுள்ளனர்.

அணுமின்நிலையத்தில் நடைபெற்ற இந்த தேர்வில் உள்ளூர் மக்கள் யாரும் தேர்வு செய்யப்படவில்லை என்ற காரணத்தை முன்னிட்டு, கூடங்குளம் ஊராட்சி மன்றத்தலைவி வின்ஷி மணியரசன், அணுமின்நிலையத்தில் வேலைபார்க்கும் மக்களை இன்று ஒருநாள் அடையாள வேலைநிறுத்தமாக வேலைக்குச் செல்ல வேண்டாம் என கூறினார். ஆனால், 1,500- க்கும் மேற்பட்ட  உள்ளூர் மக்கள் அணுமின்நிலையத்தை முற்றுகை இட்டு உள்ளூர் மக்களுக்கு தான் வேலைவாய்ப்பை தரவேண்டும் என்று  வலியுறுத்தி, சுமார் 4 மணி நேரத்திற்கும் மேலாக அணுமின்நிலைய நுழைவு வாயிலில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இதனால் பணிக்குச் செல்லும் அணுமின்நிலைய ஊழியர்கள், ஒப்பந்த பணியாளர்கள் என யாரும் பணிக்குச் செல்லவில்லை. இந்த போராட்டத்தை முன்னிட்டு, நெல்லை மாவட்டம் எஸ்.பி. சரவணன் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். நெல்லை மாவட்டம் பஞ்சாயத்து தலைவர் வி.எஸ்.ஆர். ஜெகதீஷ், கூடங்குளம் பஞ்சாயத்து தலைவி வின்ஷி மணியரசன், விஜயாபதி பஞ்சாயத்து தலைவர் சகாயராஜ், இருக்கன்த்துறை பஞ்சாயத்து தலைவர் இந்திரா முருகேசன் உள்ளிட்ட கவுன்சிலர்கள், சிறப்பு குழுவினர் என கூடங்குளம் அணுமின்நிலைய வளாக இயக்குனரிடம் பேச்சுவார்த்தைக்கு சென்றுள்ளனர்.                   

Related Stories: