×

ஜம்மு காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பா.ஜ.க. தலைவர் படுகொலை !

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பா.ஜ.க. தலைவரும், கவுன்சிலருமான ராகேஷ் பண்டிதா கொல்லப்பட்டார். ஜம்மு காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் பா.ஜ.க. தலைவர் ராகேஷ் பண்டிதா நேற்றிரவு தனது சொந்த கிராமத்தில் உள்ள  நண்பர் வீட்டுக்கு சென்றுவிட்டு இரவு 10.15 அளவில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது  மறைந்திருந்த மர்ம நபர்கள் 3 பேர் துப்பாக்கியால் சுட்டத்தில் பண்டிதாவும், அவருடன் வந்த நண்பரின் மகளும் காயமடைந்தனர். பலத்த காயமடைந்த ராகேஷை அங்கிருந்தவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர், துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த நண்பரின் மகள்  சிகிச்சை பெற்று வருகிறார்.மேலும், ராகேஷ் பண்டிதாவுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டு வந்தது. ஆனால், இந்த சம்பவம் நடந்தபோது, தனது சொந்த கிராமத்துக்குச் செல்ல இருப்பதால் பாதுகாப்பு  வேண்டாம் என்று கூறிவிட்டு சென்றுள்ளதாக போலீசார் தெரிவித்தனர். இந்த கொலை தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ராகேஷ் பண்டிதாவுடன் சேர்த்து கடந்த ஓராண்டில் மட்டும் ஜம்மு காஷ்மீரில் பா.ஜ.க.வைச் சேர்ந்த 5 தலைவர்கள் கொல்லப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது….

The post ஜம்மு காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பா.ஜ.க. தலைவர் படுகொலை ! appeared first on Dinakaran.

Tags : Pa ,Jammu and Kashmir's Pulwama district ,J.J. G.K. ,Srinagar ,J.J. G.K. Rakesh Pandita ,President ,Dinakaran ,
× RELATED பா.ஜ.க.வுக்கு எதிரான புகார் மீது...