×

சர்தார் படேல் இருந்திருந்தால் கோவா முன்பே விடுதலை பெற்றிருக்கும்: பிரதமர் மோடி பேச்சு

பனாஜி: போர்ச்சுகீசியர்களிடம் ஆதிக்கத்தின் கீழ் இருந்த கோவாவில், கடந்த 1961ம் ஆண்டு நுழைந்த இந்திய படைகள், போர்ச்சுகீசியர்களை விரட்டி அடித்து கோவாவை மீட்டது. இதனை தொடரந்்து, ஆண்டுதோறும் டிசம்பர் 19ம் தேதி கோவா விடுதலை நாள் விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் 60ம் ஆண்டு விடுதலை நாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. இதில், பிரதமர் மோடி பேசியதாவது:
இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகும், கோவாவின் விடுதலைக்கான போராட்டத்தை அனைவரும் தொடர்ந்தனர். சர்தார் வல்லபாய் படேல் இன்னும் சிறிது காலம் வாழ்ந்திருந்தால் கோவா முன் கூட்டியே விடுதலை பெற்றிருக்கும்.கோவா பல்வேறு துறைகளிலும் தற்போது முன்னேறி வருகிறது.
இவ்வாறு அவர் பேசினார். பின்னர், புனரமைக்கப்பட்ட அகுவாடா சிறை அருங்காட்சியகத்தையும், பல்ேவறு திட்டங்களையும் அவர் தொடங்கி வைத்தார்.


இன்று முதல் நல்லாட்சி வாரம்
சுதந்திர இந்தியாவின் 75ம் ஆண்டை கொண்டாடும் வகையில், ‘நல்லாட்சி வாரம்’ இன்று முதல் வரும் 25ம் தேதி வரை நாடு முழுவதும் கடைபிடிக்கப்பட உள்ளது. நல்லாட்சி வாரத்தையொட்டி, பொதுமக்களின் கோரிக்கைகளை நிவர்த்தி செய்வதற்கும், சேவை வழங்குவதை மேம்படுத்துவதற்கும் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளன. நல்லாட்சி வாரத்திற்கான தனது வாழ்த்துக்களை தெரிவித்த பிரதமர் மோடி, ‘மக்களுக்காக, மக்களே முக்கியம் என்று அணுகுமுறையுடன் நடத்தப்படும் நல்லாட்சியை மேலும் வலுப்பட்ட அரசு உறுதிபூண்டுள்ளது. வெளிப்படையான அமைப்பு, திறமையான செயல்முறை மற்றும் சுமூகமான நிர்வாகத்தை உருவாக்குவதை நோக்கி நாடு வேகமாக முன்னேறிக் கொண்டிருக்கிறது’ என தெரிவித்தார்.

Tags : Sardar Patel ,Modi , Sardar Patel, Goa, Liberation, Prime Minister Modi
× RELATED கீழ்த்தரமான அரசியல்வாதி போல பிரதமர்...