திண்டுக்கல் அருகே பள்ளி கழிவறையை மாணவிகளை சுத்தம் செய்ய வைத்த தலைமை ஆசிரியை சஸ்பெண்ட்

பட்டிவீரன்பட்டி: திண்டுக்கல் மாவட்டம், பட்டிவீரன்பட்டி அருகே மாணவிகளை பள்ளி கழிவறையை சுத்தம் செய்ய வைத்த தலைமை ஆசிரியை சஸ்பெண்ட் செய்யப்பட்டார். பாத்திரம் கழுவ வைத்த ஆசிரியர் இடமாற்றம் செய்யப்பட்டார். திண்டுக்கல் மாவட்டம், பட்டிவீரன்பட்டி அருகே செங்கட்டான்பட்டி கிராமத்தில் வத்தலக்குண்டு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி உள்ளது. இப்பள்ளி தலைமை ஆசிரியை சுகுமாரி, 7ம் வகுப்பு மாணவிகளை கழிவறையை சுத்தம் செய்ய வைத்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. மேலும் பள்ளி ஆசிரியர் ஸ்டீபன், மதிய உணவுக்குப்பின் தனது சாப்பாட்டு பாத்திரங்களை மாணவிகளை சுத்தம் செய்ய சொல்வதாகவும் புகார் கூறப்பட்டது.

இதனடிப்படையில், மாவட்ட கல்வி அலுவலர் பாண்டித்துரை, கடந்த வெள்ளிக்கிழமை பள்ளிக்கு நேரடியாகச் சென்று  விசாரணை மேற்கொண்டார். இதில், தலைமை ஆசிரியை சுகுமாரி மீதான குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்டது. எனவே அவரை சஸ்பெண்ட் செய்து மாவட்டக் கல்வி அலுவலர்  உத்தரவிட்டார். மேலும் ஆசிரியர் ஸ்டீபன், நடுக்கோட்டை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.

Related Stories: