வால்பாறையில் நள்ளிரவில் பரபரப்பு பிளஸ் 2 மாணவனை இழுத்து சென்ற கரடி

வால்பாறை:  கோவை மாவட்டம் வால்பாறை அடுத்துள்ளது சோலையார் எஸ்டேட். இங்குள்ள தோட்ட தொழிலாளர் குடியிருப்பில் வசித்து வருபவர் ஆனந்தராஜ். இவரது மகன் ராகுல் (16). அங்குள்ள பள்ளியில் பிளஸ்-2 படித்து வருகிறார். இந்நிலையில், நேற்று முன்தினம் நள்ளிரவு வீட்டின் அருகே ஏதோ சத்தம் கேட்டது. ஊருக்குள் யானை புகுந்திருக்கலாம் என்று எண்ணி ராகுல் வீட்டை விட்டு வெளியே வந்து பார்த்தார். அப்போது, இருட்டில் மறைந்திருந்த கரடி ஒன்று, ராகுலை தாக்கி கவ்வி இழுத்துச்சென்றது. அவர் அலறியபடி கூச்சல் போட்டார்.

 சத்தம் கேட்டு அருகில் இருந்த வாலிபர்கள் அங்கு ஓடி வந்தனர். அவர்கள், கரடியை விரட்டி விட்டு ராகுலை மீட்டனர். கரடி தாக்கியதில் ராகுல் காயம் அடைந்தார். அவரை வால்பாறை அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பிளஸ் 2 மாணவனை கரடி தாக்கி கவ்விச்சென்ற சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Stories: