×

பணி நியமனத்தில் இடஒதுக்கீடு முதல்வருக்கு கி.வீரமணி பாராட்டு

சென்னை: திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி வெளியிட்ட அறிக்கை:  புதியதாக 4,848 செவிலியர்கள் மற்றும் 2,448 சுகாதார ஆய்வாளர்கள் நியமனம் செய்யப்படுவார்கள். பணிநியமனங்கள் செய்வதில் 69 சதவிகித இட ஒதுக்கீட்டு முறையைக் கடைப்பிடித்து நலவாழ்வு மையங்களில் சுகாதார ஆய்வாளர்கள் 2,448 பேரும், இடைநிலை சுகாதார பணியாளர்கள் 4,848 பேரும் ஆக மொத்தம் 7,296 பேரும் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். இந்த பணிகளில், இடஒதுக்கீடு பின்பற்றப்படப் போவதில்லை என்பது போன்ற ஒரு தகவல் பரப்பப்பட்டது.  

உடனடியாக அதை முதல்வரின் கவனத்திற்குக் கொண்டு சென்றவுடன் சிறிதும் தாமதிக்காமல்  மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மூலமாக மேற்கண்ட தகவலை அளித்து, தமிழ்நாடு சமூகநீதி மண். காரணம் இது சமூகநீதிக்காகவே தனது வாழ்நாள் தொண்டாற்றிய தந்தை பெரியாரின் மண் - அதற்காகவே திராவிடர் இயக்கம் அதனை தனது மூச்சாகக் கொண்ட மண் என்பதை இதன்மூலம் உறுதிப்படுத்தியுள்ளார்.

எனினும் எப்போதும் எச்சரிக்கையுடன் வரும் ஆபத்துகளைக் கண்காணிப்பதே நமது வேலையாக இருக்க வேண்டும் என்பதையும் சமூகநீதிப் போராளிகள் மறக்கவில்லை. முதலமைச்சருக்கும், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சருக்கும் 69 சதவிகித இடஒதுக்கீடு கட்டாயம் பின்பற்றப்படும் என்ற திட்டவட்ட அறிவிப்புக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

Tags : K. Veeramani , Appointment, Reservation, K. Veeramani, Chief Minister
× RELATED இந்தியா கூட்டணியின் வெற்றி...