×

சோதனைக்கு வந்த அமலாக்க துறையினரை தடுக்கவில்லை: பாப்புலர்பிரண்ட் மாநில செயலாளர் அறிக்கை

சென்னை: சோதனைக்கு வந்த அமலாக்கத்துறையினரின்  பணிகளை யாரும் தடுக்கவில்லை. விரிவான சோதனைகளை நடத்திய பிறகு அமலாக்கத்துறை  அதிகாரிகள் திரும்பினர் என்று பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மாநில செயலாளர் நாகூர் மீரான் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: கேரள மாநிலத்தின் இடுக்கி உள்ளிட்ட 4 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தவில்லை. அவர்கள் எர்ணா குளம், மலப்புரம், கண்ணூர் மாவட்டங்களில் 3 இடங்களில் தான் சோதனை நடத்தினர். இடுக்கி மாவட்டத்தில் எங்கும் சோதனை நடத்தப்படவில்லை.

சோதனை நடந்த 3 இடங்களில் எங்குமே யாரும் அதிகாரிகளை தாக்கவில்லை. எங்கும் மோதலும் ஏற்படவில்லை. சோதனைக்கு வந்த அமலாக்கத்துறையினரின் பணிகளை யாரும் தடுக்கவில்லை. விரிவான சோதனைகளை நடத்திய பிறகு அமலாக்கத்துறை அதிகாரிகள் வெறுங்கையோடு தான் திரும்பினர். மாறாக, அமலாக்கத்துறை அதிகாரிகள் தடுத்து வைக்கப்பட்டு தாக்கப்பட்டதாக கூறுவது பொய்யான பரப்புரையாகும். சோதனை நடந்த போது சம்பவ இடத்திற்கு வந்த உறுப்பினர்கள் ஜனநாயக முறைப்படி போராட்டம் நடத்தினர். எதிர்ப்பு தெரிவிக்கும் உரிமையை அரசியலமைப்புச் சட்டம் உறுதி அளிக்கிறது.

அரசின் மக்கள் விரோத கொள்கைகளை விமர்சிப்பதன் பேரில் நடக்கும் இத்தகைய நடவடிக்கைகளுக்கு  எதிர்ப்பை தெரிவித்தால் மட்டுமே ஜனநாயகம் வலுப்பெறும். ’டெல்லி கலவரத்தில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மற்றும் எஸ்.டி.பி.ஐ கட்சிக்கு தொடர்பு இருப்பதாகவும், இந்த அமைப்புகளுக்கு  வெளிநாட்டில் இருந்து பெருமளவு நிதி வந்தது கண்டு பிடிக்கப்பட்டதாகவும்’ வெளியான தகவலும் ஜோடிக்கப்பட்டவை. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags : Secretary of State , Testing, Enforcement Department, Popular Front, Report
× RELATED பாஜக தோல்வி பயத்தில் வெறிகொண்டு...