சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதியில் திறந்தவெளி நில விவரங்கள் இணையதளத்தில் வெளியீடு: வேறுபாடு இருப்பின் தெரிவிக்கலாம்

சென்னை: சென்னை மாநகராட்சி வெளியிட்ட அறிக்கை: சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள குடியிருப்பு மனைப்பிரிவு, வணிக பயன்பாடு, தொழிற்சாலை ஆகியவற்றிக்கு கட்டிட அனுமதி, திட்ட அனுமதி அளிக்கும்போது, புலமானது 10 ஆயிரம் சதுர மீட்டருக்கு மேல் இருப்பின் அவற்றில் 10 சதவீத நிலத்தினை தான பத்திரம் மூலம் சென்னை மாநகராட்சி வசம் ஒப்படைக்கப்பட்டு, அந்த வகை நிலங்கள் திறந்தவெளி நிலங்களாக மாநகராட்சியால் அறிவிக்கப்பட்டு, இந்த நிலங்களில் மாநகராட்சி சார்பில் பொதுமக்களுக்கு பயன்படும் வகையில் பூங்கா போன்றவை அமைக்கப்பட்டு, பராமரிக்கப்பட்டு வருகிறது.

சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 15 மண்டலங்களில் இருந்து பெற்ப்பட்ட தரவுகளின்படி மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதியில் உள்ள திறந்தவெளி நிலங்கள் குறித்த விவரங்களை ெபாதுமக்கள் தெரிந்துகொள்ளும் வகையில் மண்டலங்கள், பகுதி வார்டு மற்றும் தெருவின் ெபயர்களுடன் சென்னை மாநகராட்சியின் www.chennaicorporation.gov.in என்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. அதனடிப்படையில் முதற்கட்டமாக 766 திறந்தவெளி நிலங்கள் குறித்த விவரங்கள் சென்னை மாநகராட்சியின் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

மேலும் பொதுமக்கள் www.chennaicorporation.gov.in என்ற இணையதளத்தில் public Information Portal- Know You Area-GCC facility என்ற இணைப்பை தேர்வு செய்து தங்கள் பகுதியில் உள்ள திறந்தவெளி நிலங்கள் குறித்த விவரங்களை தெரிந்து கொள்ளலாம். மேலும் மேற்கண்ட திறந்தவெளி நிலங்கள் Google வரைபடத்திலும் குறியீடு செய்யப்பட்டுள்ளது. பொதுமக்கள் திறந்தவெளி நிலங்கள் மற்றும் அதன் விவரங்களில் ஏதேனும் வேறுபாடுகள் இருப்பதாக கருதினால் osrfeedbak@chennaicorporation.gov.in என்ற மின்னஞ்சலிலும், https://chennaicorporation.gov.in/gcc/citizen-details/location.service/feedback.jsp என்ற இணையதள முகவரியிலும் தகவல் தெரிவிக்கலாம்.

Related Stories: