×

மலர்கள் இல்லாததால் பெரணி செடிகளை கண்டு ரசித்து செல்லும் சுற்றுலா பயணிகள்

ஊட்டி: மலர்களே இல்லாத தாவரவியல் பூங்காவில் தற்போது பல வகைகளை கொண்ட பெரணி செடிகளை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து செல்கின்றனர்.
ஊட்டி  அரசு தாவரவியல் பூங்காவிற்கு நாள்தோறும் பல ஆயிரம் சுற்றுலா பயணிகள்  வருகின்றனர். இங்கு வரும் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் பொருட்டு  தாவரவியல் பூங்கா முழுவதிலும், பல லட்சம் மலர் செடிகள் நடவு செய்யப்பட்டு,  அதில் மலர்கள் பூத்துக்காணப்படும். மேலும், பல ஆயிரம் தொட்டிகளில் மலர்  செடிகள் நடவு செய்யப்பட்டு அதிலும் மலர் பூத்துக் காணப்படும். இதனை  சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து செல்வது வழக்கம்.

குறிப்பாக, கோடை காலமான  ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் முதல் சீசன் அனுசரிக்கப்படும் நிலையில்,  அப்போது வரும் சுற்றுலா பயணிகளை வரவேற்பதற்காக பூங்கா தயார் செய்யப்படுவது  வழக்கம். தற்போது முதல் சீசனுக்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.  இதற்காக பூங்காவில் உள்ள அனைத்து மலர் செடிகளும் அகற்றப்பட்டுள்ளது.  தற்போது விதைப்பு மற்றும் நாற்று உற்பத்தியில் பூங்கா ஊழியர்கள்  ஈடுபட்டுள்ளனர். இதனால், பூங்காவில் மலர்களே இன்றி காட்சியளிக்கிறது.

பூங்காவிற்கு வரும் சுற்றுலா பயணிகள் தற்போது இங்குள்ள இலைப்பூங்கா மற்றும்  பெரணி செடிகளை கண்டு ரசித்து செல்கின்றனர். குறிப்பாக, கண்ணாடி மாளிகையில்  வைக்கப்பட்டுள்ள பல வகையான, பல ஆயிரம் பெரணி செடிகளை கண்டு ரசித்து  செல்வது மட்டுமின்றி, அதன் அருகே நின்று புகைப்படம் எடுத்துச்  செல்கின்றனர். மலர்களே இல்லாத பூங்காவில் இந்த பெரணி செடிகள் தற்போது  சுற்றுலா பயணிகளுக்கு ஆறுதல் அளிக்கிறது.

Tags : Perani , Tourists visiting Perani plants due to the lack of flowers
× RELATED சுற்றுலா பயணிகள் பாதுகாப்பு கருதி...