×

திருவாரூர் அருகே கொரடாச்சேரியில் பழுதடைந்த நிலையில் உள்ள பள்ளி கட்டிடங்கள் இடிக்கும் பணி துவக்கம்

திருவாரூர்: திருவாரூர் அருகே பழுதடைந்த நிலையில் உள்ள பள்ளி கட்டிடங்களை இடி க்கும் பணிதொடங்கி நடை பெற்று வருகிறது. திருநெல்வேலியில் பள்ளியின் கழிவறை சுவர் இடிந்து விழுந்து 3 மாணவர் கள் உயிரிழந்த நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழக அரசு துரிதப்படுத்தி உள்ளது. அதன்படி திருவாரூர் மாவட்டத்தில் உள்ள 1026 பள்ளிகளில் முழுமையாக 146 கட்டிடங்கள் சேதமடைந் துள்ளது. குறிப்பாக 50ஆண்டு பழமையான கட்டிடங் கள் ஏராளமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதனை மாவட்ட கலெக்டர் காய த்ரி கிருஷ்ணன் உத்தரவின் பேரில் பழுதடைந்த பயன்படுத்த முடியாத நிலை யில் உள்ள பள்ளி கட்டிடங்கள் தற்போது இடிக்கப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக திருவாரூர் மாவட்டத்தில் கொரடாச்சேரியில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பழுதடைந்த பயன்படுத்த முடியாத ஐந்து கட்டிடங்கள் இடிக்கப்பட்டு வருகிறது. அந்த கட்டிடங் களில் பயன்படுத் தக்கூடிய மேஜைகள் நாற்காலிகள் மரப் பொருட்கள் ஆகியவற்றை முதலில் அப்புறப் பட்டு வருகிறது.

அதன் பிறகு அந்த கட்டிடத்தை நவீன இயந்திரங்கள் கொண்டு முற்றிலுமாக அழிக்க உள்ளார்கள். மாவட் டம் முழுவதும் பல்வேறு இடங்களில் அமைந் துள்ள பழுதடைந்த பயன்படுத்த முடியாத பள்ளி கட்டிடங் கள் மாவட்ட கலெக்டர் உத்தரவு படி இடிக்கப்பட்டு வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : Koradacheri ,Thiruvarur , Dilapidated school in Koradacheri near Thiruvarur Commencement of demolition of buildings
× RELATED 6,417 மாணவர்கள் புதிதாக சேர்க்கை: மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தகவல்