×

ஒடிஷாவை வீழ்த்தியது சென்னை

வாஸ்கோ: ஐஎஸ்எல் கால்பந்து தொடரில் ஒடிஷா எப்சி அணியுடன் நேற்று மோதிய சென்னையின் எப்சி அணி 2-1 என்ற கோல் கணக்கில் அபாரமாக வென்று புள்ளிப்பட்டியலில் 3வது இடத்துக்கு முன்னேறியது. திலக் மைதானத்தில் நேற்று இரவு நடந்த இப்போட்டியில், சென்னையின் எப்சி சார்பில் ஜெர்மான்பிரீத் சிங் 23வது நிமிடத்திலும், மிர்லன் முர்ஸேவ் 63வது நிமிடத்திலும் கோல் அடித்தனர்.

பதில் கோல் அடிக்க ஒடிஷா அணி வீரர்கள் கடுமையாக முயற்சித்த நிலையில், அந்த அணியின் ஹெர்னாண்டஸ் கடைசி விநாடியில் (90+5’) ஒரு ஆறுதல் கோல் அடித்தார். ஆட்ட நேர முடிவில் சென்னையின் எப்சி 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றியை வசப்படுத்தியது. சென்னை அணி 6 லீக் ஆட்டத்தில் விளையாடி 3 வெற்றி, 2 டிரா, 1 தோல்வியுடன் 11 புள்ளிகள் பெற்று 3வது இடத்துக்கு முன்னேறி உள்ளது.


Tags : Chennai ,Odisha , Odisha, Football, Chennai. Goal
× RELATED கஞ்சா விற்ற 40 பேர் கைது