தமிழகத்தில் 613 பேருக்கு கொரோனா: சிகிச்சை பலனின்றி 9 பேர் உயிரிழப்பு

சென்னை: தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை நேற்று வெளியிட்ட அறிக்கை:  தமிழகத்தில் நேற்று 613 பேருக்கு பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது.  அதிகபட்சமாக சென்னையில் 125 பேரும், கோவையில் 101 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். மற்ற மாவட்டங்களில் பாதிப்பு எண்ணிக்கை நூற்றுக்கும் குறைவாகவே உள்ளது. நேற்று கொரோனாவில் இருந்து 665 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். மேலும், மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 9 பேர் நேற்று உயிரிழந்தனர்.

Related Stories: