×

உடல்நலக்குறைவால் அவதிப்படும் ரசிகரின் மகளுக்கு ரஜினிகாந்த் வீடியோகாலில் ஆறுதல்

சென்னை: உடல்நலக்குறைவு காரணமாக அவதிப்படும் தனது ரசிகரின் மகளுக்கு நடிகர் ரஜினிகாந்த் வீடியோகால் மூலம் பேசி ஆறுதல் கூறியுள்ளார். தற்போது அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. ஒன்றிய அரசு கொடுத்த ‘தாதா சாகேப் பால்கே’ விருதை டெல்லியில் நடந்த விழாவில் பெற்றுக்கொண்டு சென்னை திரும்பிய ரஜினிகாந்துக்கு திடீரென்று உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. சில நாட்களில் வீடு திரும்பிய அவர் தற்போது உடல்நிலை தேறி ஓய்வெடுத்து வருகிறார்.

இந்நிலையில், பெங்களூருவை சேர்ந்த அவரது ரசிகர் ஒருவரின் மகள் சவுமியா, உடல்நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வருகிறார். அவர் ரஜினிகாந்துடன் போனில் பேச வேண்டும் என்று விரும்பினார். இதையடுத்து பெங்களூருவில் வசிக்கும் ரஜினிகாந்த் நண்பர்கள் சிலர் உதவியுடன் சவுமியாவிடம் ரஜினிகாந்த் வீடியோகாலில் பேசினார்.  அப்போது ரஜினிகாந்த், ‘சவுமியா கண்ணா, எப்படிம்மா இருக்கே. தைரியமா இரு. உனக்கு எதுவும் ஆகாது. ஆண்டவன் இருக்கான். உனக்காக நான் ஆண்டவன் கிட்ட பிரார்த்தனை பண்றேன். இப்ப கொரோனா நேரமா இருக்கு. எனக்கும் கொஞ்சம் உடல்நலம் இல்லை. அப்படி இல்லேன்னா, உன்னை நேர்ல வந்து பார்த்திருப்பேன். சிரிச்ச முகமா அழகா இருக்கேம்மா நீ. நல்லா இருப்பே. உனக்கு எதுவும் ஆகாது’ என்று அன்பு பொங்கி வழியும் குரலில் பேசியுள்ளார்.

Tags : Rajinikanth , Sick, fan, Rajinikanth, comfort
× RELATED அண்ணாமலையார் கோயிலில் சவுந்தர்யா...