×

வினியோகஸ்தர் ஆனார் ராஜமவுலி

வினியோகஸ்தர் ஆனார் ராஜமவுலி

சென்னை: ராஜமவுலி இயக்கத்தில் அடுத்த மாதம் ஆர்ஆர்ஆர் படம் திரைக்கு வர உள்ளது. இந்நிலையில் இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மொழிகளில் உருவாகும் படம் பிரம்மாஸ்திரம். இதில் ரன்பீர் கபூர், அலியா பட், அமிதாப் பச்சன், நாகார்ஜுனா நடிக்கின்றனர். அயான் முகர்ஜி இயக்குகிறார். இந்த படத்தை தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய தென்னிந்திய மொழிகளில் வெளியிடும் உரிமையை ராஜமவுலி பெற்றுள்ளார். இதன் மூலம் அவர் திரைப்பட வினியோகஸ்தராக மாறியுள்ளார். ‘புதிய தளத்தில் நுழைகிறேன். ரசிகர்களின் ஆதரவு எனக்கு வேண்டும்’ என ராஜமவுலி கூறியுள்ளார்.

Tags : Rajamavuli , Distributors, Rajamavuli, Director,
× RELATED ‘அஜித்தை பார்த்தால் பெருமையா இருக்கு’: ராஜமவுலி நெகிழ்ச்சி