×

எம்.ஜே.மோசஸ் மறைவு கே.எஸ்.அழகிரி இரங்கல்

சென்னை: காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி நேற்று வெளியிட்ட இரங்கல் செய்தி: மூத்த காங்கிரஸ் தலைவரும், நாடாளுமன்ற, சட்டமன்ற முன்னாள் உறுப்பினருமான டாக்டர் எம்.ஜே.மோசஸ் காலமான செய்தி கேட்டு மிகுந்த வருத்தமும், துயரமும் அடைந்தேன். நீண்டகாலமாக தேசிய இயக்கத்தின் வளர்ச்சிக்காக பாடுபட்டவர். மறைந்த டாக்டர் மத்தியாஸ்சின் மகனான இவர், அவரது வழியில் மருத்துவ சேவை புரிந்தவர். கன்னியாகுமரி மாவட்ட மக்களின் அன்பைப் பெற்றவர். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்குஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.

Tags : KS Alagiri ,MJ Moses , Funeral of MJ Moses, KS Alagiri, Funeral
× RELATED தமிழ்நாடு முழுவதும் விவசாயிகளுக்கு...