சென்னை விமான நிலையத்தில் ரூ.1.13 கோடி மதிப்புள்ள தங்கம் மின்னணு சாதனம் பறிமுதல்

சென்னை: துபாயிலிருந்து இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் நேற்று சென்னை வந்தது. அதில் சென்னையை சேர்ந்த 4 ஆண் பயணிகள் ஒரு குழுவாக வந்திருந்தனர். சுங்கத்துறை சோதனையில் அவர்களுடைய சூட்கேஸ்களில் ரூ.42.04 லட்சம் மதிப்புள்ள 1.147 கிலோ தங்கம் மற்றும் ரூ.49.5 லட்சம் மதிப்புள்ள மின்னணு பொருட்களை கடத்தி வந்தது தெரிந்தது. அவற்றை பறிமுதல் செய்து, 4 பயணிகளையும் கைது செய்தனர்.  

இதேபோல், சார்ஜாவிலிருந்து சென்னை வந்த இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானத்தில், வயருக்குள் மறைத்து கடத்தி வரப்பட்ட ரூ.11.87 லட்சம் பதிப்புள்ள 275 கிராம் தங்கம் மற்றும் ரூ.9.8 லட்சம் மதிப்புள்ள மின்னணு சாதனங்களை சுங்கத்துறையினர் பறிமுதல் செய்து, இதை கடத்தி வந்த சென்னை பயணியை கைது செய்தனர்.

Related Stories: