×

தமிழகத்தில் இன்று முதல் பனிமூட்டம்: வெப்பநிலை 2 டிகிரி குறைவாக இருக்கும்

சென்னை: தமிழகத்தில் இன்று முதல் பனிமூட்டம் காணப்படும். வெப்பநிலை இயல்பை விட 2 டிகிரி செல்சியஸ் குறைவாக இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் கூறியதாவது: வடகிழக்கு பருவகாற்றின் காரணமாக இன்று முதல் 22ம் தேதி வரை தமிழகம் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும். இன்று உள் மாவட்டங்கள் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும். குறைந்தபட்ச வெப்பநிலை இயல்பைவிட 1 முதல் 2 டிகிரி செல்சியஸ் குறையும். 20ம் தேதி முதல் 22ம் தேதி வரை உள்மாவட்டங்கள் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் லேசான பனிமூட்டம் இருக்கும்.

குறைந்தபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் குறைவாகக் காணப்படும். சென்ைைனய பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் இருக்கும். அதிகப்பட்ச வெப்பநிலை 29 மற்றும் குறைந்த பட்ச வெப்பநிலை 22 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும். கடந்த 24 மணி நேரத்தில் அதிகப்பட்சமாக ராமேஸ்வரத்தில் 3 சென்டி மீட்டர் மழை பெய்துள்ளது. இன்று முதல் 20ம் தேதி வரை குமரிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். இப்பகுதிகளுக்கு செல்லும் மீனவர்கள் எச்சரிக்கையுடன் செல்ல ேவண்டும். இன்று தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பூமத்திய ரேகை பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.இவ்வாறு அவர் கூறினார்.

Tags : Tamil Nadu , Tamil Nadu, Fog, Temperature, Meteorological Center
× RELATED கல்வி தொடர்பான திரைப்படங்களை பள்ளி,...