உடற்தகுதியை நிரூபிக்க ரோகித் சர்மா, ஜடேஜா பெங்களூருவில் முகாம்

பெங்களூரு: இந்திய கிரிக்கெட் அணியின் டி.20, ஒரு நாள் போட்டிகளுக்கான கேப்டன் ரோகித்சர்மா, தொடையில் ஏற்பட்ட காயம் காரணமாக தென்ஆப்ரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இருந்து விலகினார். இதேபோல் வலது முழங்கையில் காயம் காரணமாக ஆல்ரவுண்டர் ஜடேஜாவும் தென்ஆப்ரிக்க டெஸ்ட் அணியில் இடம் பெறவில்லை. ஆனால் ஒருநாள் போட்டிகளில் ஆட இருவரும் தயாராகி வருகின்றனர்.

காயத்தில் இருந்து மீண்டுள்ள இருவரும் உடற்தகுதியை நிரூபிக்க பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமிக்கு வந்துள்ளனர். தென்ஆப்ரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இந்திய அணி அடுத்த வாரத்தில் அறிவிக்கப்பட உள்ளது. உடற்தகுதியை நிரூபிக்கும் பட்சத்தில் இருவரும் அணியில் இடம்பெறுவார்கள். இதனிடையே அமீரகத்தில் வரும் 23ம்தேதி முதல் நடைபெற உள்ள யு 19 ஆசிய கோப்பை தொடருக்கான 25 பேர் கொண்ட இந்திய அணியினர் தேசிய கிரிக்கெட் அகாடமியில் பயிற்சி மேற்கொண்டுள்ளனர். அவர்கள் மத்தியில் ரோகித்சர்மா நேற்று உரையாற்றி ஆலோசனைகளை வழங்கினார்.

Related Stories: