×

வீடு கட்டுவதற்கான இடத்தை ஆய்வு செய்த அதிகாரிகளை இருளர்கள் நரிக்குறவர்கள் முற்றுகை

மாமல்லபுரம்: மாமல்லபுரம் பேரூராட்சி பூஞ்சேரி பகுதியில் வசிக்கும் நரிக்குறவர்கள், இருளர் இனத்தை சேர்ந்த 282 பேருக்கு இலவச வீட்டுமனை பட்டா, குடும்ப அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் கார்டு, சாதி சான்று, முதியோர் உதவித்தொகை, நரிக்குறவர் நல வாரிய அட்டை, பழங்குடியினர் நல வாரிய அட்டை, பயிற்சிக்கான ஆணைகள், வங்கி கடனுதவிகள், கலைஞர் நகர மேம்பாட்டுத் திட்ட முன்மொழிவு ஒப்புதல், அங்கன்வாடி மற்றும் பள்ளி வகுப்பறைகள் கட்டுவதற்கான ஆணைகள் உள்பட பல்வேறு வளர்ச்சி திட்டப் பணிகள் மேற்கொள்வதற்கான ஆணைகள் ஆகியவற்றை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த நவம்பர் 4ம் தேதி வழங்கினார்.

இந்நிலையில், பூஞ்சேரி பகுதியில் வசிக்கும் நரிக்குறவர்கள், இருளர்களுக்கு வீடு கட்டுவதற்காக ‘உங்கள் தொகுதியில் முதல்வர்’ திட்டத்தின் கீழ் பட்டா மற்றும் ஆணைகள் 21 பேருக்கு வழங்கப்பட்டன. அதற்காக, அப்பகுதியில் தமிழக அரசு மூலம் வீடு கட்டுவதற்காக வழங்கப்பட்ட இடத்தை தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய அதிகாரி முருகதாஸ், காஞ்சிபுரம் மண்டல பேரூராட்சிகளின் உதவி இயக்குநர் வில்லியம் ஏசுதாஸ் ஆகியோர் நேற்று ஆய்வு செய்தனர். அப்போது, பட்டா மற்றும் வீடு கட்டும் ஆணைகள் பெற்று கொண்டவர்களிடம், வீடுகளை நீங்களே கட்டி கொள்கிறீர்களா இல்லை கட்டுவதற்கு ஏற்பாடு செய்ய வேண்டுமா என கேட்டனர்.

அதற்கு நரிக்குறவர்கள், திடீரென அதிகாரிகளை முற்றுகையிட்டனர். பின்னர், வீடு கட்டுவதற்கு தமிழக அரசு ரூ.2 லட்சத்து 10 ஆயிரம் ஒதுக்கி, 4 தவணையாக பிரித்து வங்கி கணக்கில் வழங்குவதாக தெரிவித்துள்ளது. இந்த தொகையை உயர்த்தி வழங்க வேண்டும். மாற்று இடம் வழங்க வேண்டும் என கூறி கடும் வாக்குவாதம் செய்தனர். மேலும், நாங்கள் வசிக்கும் குடியிருப்பையொட்டி இருளர்களும் உள்ளனர். அவர்கள், இங்கு வீடு கட்டினால் நாங்கள் எங்கு செல்வோம். ஒரே, வீட்டில் 2, 3 குடும்பங்கள் வசிக்கிறோம்.

எனவே, இங்கு வீடு கட்டி கொடுத்தால் எங்களுக்கு போதாது. அரசு மருத்துவமனை, அருகில் உள்ள மெய்க்கால் புறம்போக்கில் தலா குடும்பத்துக்கும் 3 சென்ட் இடம் ஒதுக்கித் தர வேண்டும். இல்லாவிட்டால், ஏதாவது ஒரு ஊரில் எங்களுக்கு இடம் கொடுத்து, வீடு கட்டித் தர வேண்டும் என கோஷமிட்டனர். அதற்கு, இதுகுறித்து, கலெக்டரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும் என்று கூறி புறப்பட்டனர்.

Tags : Dark Ones , House, inspection, officer, siege
× RELATED வீடு கட்டுவதற்கான இடத்தை ஆய்வு செய்த...