‘சகி’ பெண்கள் வள மையத்தில் மகளிருக்கு வேலை வாய்ப்பு: விண்ணப்பங்கள் வரவேற்பு

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்ட சமூக நல அலுவலர் லலிதா வெளியிட்டுளள் அறிக்கை. திருவள்ளூர் மாவட்டத்தில் தனியார் மற்றும் பொது இடங்களில், குடும்பத்தில், சமூதாயத்தில் மற்றும் பணிபுரியும் இடத்தில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு உதவும் வகையில் சகி என்ற பெண்கள் வள ஒன் ஸ்டாப் மையம் செயல்படுகிறது.இங்கு, பணிபுரிய மாவட்டத்தில் நிரந்தர முகவரியை கொண்ட தகுதி பெற்ற பெண்கள், ஒப்பந்த பணியாளர்களாக தேர்வு செய்யப்படவுள்ளனர். மாவட்ட சமூக நல அலுவலர் அலுவலகத்தில் தங்கள் சுயவிவரங்களுடன் வரும் 23ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். ஒன் ஸ்டாப் மைய நிர்வாகி: சமூகப் பணியில் முதுகலைப் பட்டம் பெண்களுக்கு எதிரான வன்முறைகளில் பணிபுரிந்த குறைந்தபட்சம் 4 ஆண்டுகள் அனுபவம்.

இது ஒன் ஸ்டாப் மையத்துடன் இணைக்கப்பட்ட ஓரு  குடியிருப்பு பதவி. மாத சம்பளம் ரூ.30,000. வழக்கு பணியாளர் பணியிடம்: சமூக பணியில் இளங்கலைப் பட்டம் பெண்களுக்கு எதிரான வன்முறைகளில் பணிபுரிந்த குறைந்தபட்சம் 2 ஆண்டுகள் அனுபவம். மாத சம்பளம் ரூ.12 ஆயிரம். பல் நோக்கு உதவியாளர் பணியிடம்: விண்ணப்பதாரர் அலுவலக அமைப்பில் பணிபுரிந்த அனுபவம் பெற்றிருக்க வேண்டும். சமைக்கத் தெரிந்திருக்க வேண்டும். 24 மணிநேர சேவையை வழங்க ஷிப்ட்களில் வேலை செய்ய வேண்டும்.

மாத சம்பளம் ரூ.6,400. பணியிடங்களுக்கு உள்ளுரை சேர்ந்த பெண் விண்ணப்பதாரர்கள் மட்டுமே விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு கலெக்டர் அலுவலகத்தில் இயங்கும் மாவட்ட சமூகநல அலுவலகத்தையும், 044-29896049 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது.

Related Stories: