தேவதாசிகள் பற்றி ஆய்வு செய்த சாய் பல்லவி

சென்னை: தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம் மொழிகளில் தயாராகி உள்ள படம் ஷியாம் சிங்கா ராய். இதில் நானி, சாய் பல்லவி, கிரித்தி ஷெட்டி, மடோனா செபாஸ்டியன் உள்பட பலர் நடித்துள்ளனர். இந்த படம் பூர்வ ஜென்மம் தொடர்பான பேன்டசி ஆக்சன் படம். இதில் சாய்பல்லவி தேவதாசி கேரக்டரில் நடித்துள்ளார். இந்த படத்தின் அறிமுக நிகழ்ச்சி சென்னையில் நடந்தது. இதில் கலந்து கொண்ட சாய் பல்லவி பேசியதாவது: இந்த படத்தில் நான் தேவதாசியாக நடிக்கிறேன். இதற்காக தேவதாசிகள் பற்றி நிறைய படித்தேன். ஆய்வும் செய்தேன், இயக்குனரும் நிறைய ஆய்வு செய்து இந்த கேரக்டரை உருவாக்கினார். தேவதாசிகளின் மேனரிசம், அவர்களின் வாழ்வியலை உள்வாங்கிக் கொண்டு நடித்திருக்கிறேன். நான் எந்த படத்தில் நடித்தாலும், நடிக்கும் கேரக்டரை நன்றாக அறிந்து கொண்டுதான் நடிப்பேன்.

இதற்காக சில முன்னேற்பாடுகளை செய்து கொள்வேன். அப்படித்தான் தேவதாசி கேரக்டருக்கும் தயாரானேன். தென்னிந்திய மொழி படங்கள் அனைத்தையும் சமமாக பார்க்கிறேன். கொரோனா காலத்துக்கு முன்பு ஒப்புக்கொண்ட தெலுங்கு படங்கள் வரிசையாக ரிலீசாவதால் அதிக தெலுங்கு படங்களில் நடிப்பது போன்ற தோற்றம் ஏற்பட்டுள்ளது. இந்த படத்தின் கதையை கேட்டதுமே இது தமிழிலும் வந்தால் நன்றாக இருக்கும் என்று நினைத்தேன். அது இப்போது நடந்திருக்கிறது என்றார். நிகழ்ச்சியில் நடிகர் நானி, தயாரிப்பாளர் வெங்கட் பொயனப்பள்ளி, நடிகர் சமுத்திரக்கனி ஆகியோரும் கலந்து கொண்டனர்.  இப்படம் வரும் 24ம் தேதி தியேட்டர்களில் வெளிவருகிறது.

Related Stories: