×

முதல் நாளில் ரூ.33 கோடி வசூலித்த ஸ்பைடர் மேன்

சென்னை: ஸ்பைடர் மேன்: நோ வே ஹோம் படம், முதல் நாளில் மட்டும் இந்தியாவில் ரூ.33 கோடி வசூலித்துள்ளது. ஸ்பைடர் மேன் பட சீரிஸ்களுக்கு உலக அளவில் ரசிகர்கள் உள்ளனர். அந்த வரிசையில் வெளியாகியுள்ள புதிய படம்தான் ஸ்பைடர்மேன்:  நோ வே ஹோம். டாம் ஹாலண்ட் நடித்துள்ள இந்த படத்தை ஜான் வாட்ஸ் இயக்கியுள்ளார். இந்த படத்தை உலகம் முழுவதும் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வந்தனர். படம் வெளியாகும் முன்பே டிக்கெட் முன்பதிவிலும் இந்த படம் சாதனை புரிந்து வந்தது. இந்நிலையில் கடந்த 16ம் தேதி இந்தியாவில் தமிழ், ஆங்கிலம், இந்தி, தெலுங்கு மொழிகளில் படம் வெளியானது.

முதல் நாளில் மட்டும் ரூ.33 கோடியை இப்படம் வசூலித்து சாதித்துள்ளது.  ஹாலிவுட் படங்களில் முதல் நாளில் இந்தியாவில் அதிகம் வசூலித்த படம் அவெஞ்சர்ஸ் என்ட் கேம் தான். அந்த படம் முதல் நாளில் ரூ.53 கோடி வசூலித்தது. 2019ல் அந்த படம் வெளியானது. அப்போது கொரோனா காலகட்டம் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் இப்போது கொரோனா பீதிக்கு இடையிலும் பல மாநிலங்களில் தியேட்டர்களில் 50 சதவீத பார்வையாளர்களுக்கு மட்டுமே அனுமதி என்ற நிலையிலும் ஸ்பைடர் மேன் ரூ.33 கோடியை வசூலித்திருப்பது பெரும் சாதனை என சினிமா வர்த்தகர்கள் கூறுகின்றனர். மூன்று நாட்களில் இந்த படம் ரூ.100 கோடி வசூலிக்கும் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.Tags : Spider-Man , Spider-Man, collections, movies
× RELATED மடாமி வெப்: விமர்சனம்