அதிமுக ஆட்சியில் கோயில் தேரில் சூறையாடப்பட்ட 128 கிலோ வெள்ளி: எச்.ராஜா பகீர்

பள்ளிகொண்டா: வேலூர் மாவட்டம், பிள்ளையார்குப்பத்தில் பாஜவினருக்கு கட்சி சார்ந்த பணிகள் குறித்து 3 நாள் பயிற்சி நேற்று தொடங்கியது. இதில் பங்கேற்க வந்திருந்த பாஜக முன்னாள் தேசிய செயலாளர் எச்.ராஜா திடீரென்று பள்ளிகொண்டா அடுத்த வெட்டுவாணம் எல்லையம்மன் கோயிலுக்கு நேற்று காலை 8 மணிக்கு வந்து எல்லையம்மன் மற்றும் ரேணுகாதேவி அம்மனை தரிசனம் செய்தார். அதனைதொடர்ந்து யாகசாலை மண்டபத்தில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு பிரசாதம் வழங்கப்பட்டது.

சுவாமி தரிசனத்திற்கு பிறகு வெளியே வந்த எச்.ராஜா செய்தியாளர்களிடம் கூறியதாவது: சிறப்பு வாய்ந்த வெட்டுவாணம் அருட்திரு எல்லையம்மன் கோயிலில் பல ஆண்டுகளாக நடைபெறும் தேர்த்திருவிழாவுக்கு  128 கிலோவினால் ஆன வெள்ளித்தேர் பயன்படுத்தப்பட்டு வந்தது. அவை கடந்த 10 வருட கால ஆட்சியில் சூறையாடப்பட்டு தற்போது வெறும் மரத்தேராக மாறி காட்சியளிக்கின்றது. இவ்வாறு ராஜா கூறினார்.

Related Stories: