ஒமிக்ரான் சோதனையில் கூடுதல் கவனம் தேவை: ராமதாஸ் டிவிட்

சென்னை: பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், ‘தமிழ்நாட்டில் ஒமிக்ரான் வகை கொரோனா உறுதி செய்யப்பட்டவர் நைஜீரியாவிலிருந்து சென்னைக்கு வந்த போது விமான நிலையத்திலிருந்து எந்த சோதனைக்கும் உட்படுத்தப்படாமல் அனுப்பி வைக்கப்பட்டுள்ளார் என்று ஊடகங்களில் வெளியாகியுள்ள செய்திகள் மிகவும் கவலையளிக்கின்றன.  இனி வரும் நாட்களிலாவது சென்னைக்கு வரும் விமானப் பயணிகள் எந்த நாட்டிலிருந்து பயணத்தை தொடங்குகிறார்கள் என்பதை ஆராய்ந்து, அவர்கள் அனைவருக்கும் கொரோனா சோதனையை கட்டாயமாக்க வேண்டும்’ எனக் கூறப்பட்டுள்ளது.

‘‘புழல் காவாங்கரையை சேர்ந்த சுஜித்  என்ற மாணவன் நீட் தேர்வில் குறைந்த மதிப்பெண் எடுத்ததால் மருத்துவப்  படிப்பில் சேர முடியாது என்ற கவலையில் தற்கொலை செய்து கொண்டது  வேதனையளிக்கிறது. ஒன்றிய, மாநில அரசுகள்  எந்த நடவடிக்கையும் எடுக்காதது வருத்தமளிக்கிறது’ என மற்றொரு டிவிட்டர்  பதிவில் ராமதாஸ் கூறியுள்ளார்.

Related Stories: