பஞ்சாப்பில் பாஜ.வுடன் அமரீந்தர் சிங் கூட்டணி

புதுடெல்லி: பஞ்சாப் சட்டமன்ற தேர்தலில் பாஜ.வுடன் அமரீந்தர் சிங் கூட்டணியை உறுதி செய்துள்ளார். பஞ்சாப் மாநிலத்தில் காங்கிரஸ் முதல்வராக இருந்த அமரீந்தர் சிங் உட்கட்சி பூசல் காரணமாக, சில மாதங்களுக்கு முன் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். தொடர்ந்து காங்கிரசில் இருந்தும் விலகி, ‘பஞ்சாப் லோக் காங்கிரஸ்’ என்ற புதிய கட்சியை தொடங்கினார். அடுத்தாண்டு இந்த மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், பாஜ.வுடன் அமரீந்தர் கூட்டணி அமைத்துள்ளார்.

நேற்று காலை இம்மாநில பாஜ மேலிட பொறுப்பாளரும், ஒன்றிய அமைச்சருமான கஜேந்திர ஷெகாவத்தை அமரீந்தர் அவருடைய வீட்டிற்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தினார். பின்னர், இருவரும் கூட்டாக அளித்த பேட்டியில், கூட்டணி அறிவிப்பை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டனர்.  ஷெகாவத் அளித்த பேட்டியில், ‘‘பாஜ.வும், அமரீந்தரின் பஞ்சாப் ேலாக் காங்கிரசும் பஞ்சாப் சட்டமன்ற தேர்தலில் இணைந்து போட்டியிடும். ஒன்றிணைந்து பணியாற்றுவோம்,” என்றார்.  அமரீந்தர் சிங் கூறுகையில், ‘‘தேர்தலில் எங்கள் கூட்டணி 101 சதவீதம் வெற்றி பெறும்,” என்றார். இவர்கள் விரைவில் தொகுதி உடன்பாடு பற்றி பேச்சுவார்த்தை நடத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories: