கோரிக்கைகளை வலியுறுத்தி அதிமுக ஆர்ப்பாட்டம்; சேலத்தில் இ.பி.எஸ்., தேனியில் ஓ.பி.எஸ். பங்கேற்பு

சென்னை: தமிழகம் முழுவதும் அதிமுக சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் இன்று நடைபெற்றது. சேலம் நாட்டாண்மை கழக கட்டிடத்தின் முன் நடந்த ஆர்ப்பாட்டத்தில் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி பேசினார். தேனி நகர் பங்களாமேட்டில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் பேசினார். இதில், தேனி தொகுதி எம்பி ரவீந்திரநாத் உள்ளிட்டோர் பங்கேற்றனர். மதுரை செல்லூரில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

கோவை செஞ்சிலுவை சங்க அலுவலகம் அருகே நடந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழக சட்டமன்ற அதிமுக கொறடா எஸ்.பி.வேலுமணி, எம்எல்ஏக்கள் பொள்ளாச்சி ஜெயராமன்,  பி.ஆர்.ஜி.அருண்குமார், அம்மன் கே.அர்ஜூனன், ஏ.கே.செல்வராஜ், செ.தாமோதரன், வி.பி.கந்தசாமி, கே.ஆர்.ஜெயராம், டி.க.அமுல்கந்தசாமி உட்பட பலர் கலந்து கொண்டனர். நாகர்கோவில் கலெக்டர் அலுவலகம் முன்பு தளவாய் சுந்தரம் எம்எல்ஏ தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டம் பத்து நிமிடத்தில் முடிந்தது.  இதேபோல் விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், நெல்லை, தென்காசி, திருச்சி, தஞ்சை, கரூர், பெரம்பலூர், அரியலூர், வேலூரிலும் அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

Related Stories: