இந்திய தேர்தல் ஆணையர்களுடன் பிரதமர் மோடியின் முதன்மைச் செயலர் பி.கே.மிஸ்ரா விவாதித்ததால் சர்ச்சை

டெல்லி: இந்திய தேர்தல் ஆணையர்களுடன் பிரதமர் மோடியின் முதன்மைச் செயலர் பி.கே.மிஸ்ரா விவாதித்ததால் சர்ச்சை எழுந்துள்ளது. அரசியல் சட்டப்படியான சுதந்திரமான அமைப்பே இந்திய தேர்தல் ஆணையம் ஆகும். அதிகார வர்க்க அழுத்தங்களை தவிர்க்கவே எப்போதும் தேர்தல் ஆணையர்கள் அரசு  விலகி இருப்பார்கள். பாதுகாப்பு பணிக்கு வீரர்களை கோருதல் போன்ற நிர்வாக பணிகளுக்கு மட்டுமே அதிகாரிகளுடன் ஆணையம் தொடர்பு கொள்ளும். தேவைப்பட்டால் ஒன்றிய சட்ட, உள்துறை அமைச்சக அதிகாரிகளை வரவழைத்து தேர்தல் ஆணைய அதிகாரிகள் விவாதிப்பார்கள். நடைமுறைக்கு மாறாக, தலைமை தேர்தல் ஆணையரும் இதர ஆணையர்களும் சில பிரச்சனைகளை விவாதிக்க அழைக்கப்பட்டனர். விவாதத்தில் பங்கேற்க வேண்டும் என்று பிரதமரின் முதன்மை செயலர் எதிர்ப்பார்ப்பதாக சட்ட அமைச்சகம் அழைத்திருந்தது.

உத்தரவிடுவது போல் அனுப்பிய அழைப்பு தேர்தல் ஆணையர் உள்ளிட்டோருக்கு கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. அரசியல் சட்ட நடைமுறைகளை மீறும் வகையில் முன்னெப்போதும் இல்லாத வழக்கமாக அழைப்பு அனுப்பப்பட்டதால் அதிருப்தி தெரிவிக்கப்பட்டது. பிரதமரின் முதன்மை செயலர் நவ.16-ல் நடத்திய கூட்டத்தில் பங்கேற்பதில்லை என்று முடிவு செய்திருந்தார் தலைமை ஆணையர். எனினும் பிரதமரின் முதன்மை செயலர் கூட்டத்தில் தலைமை தேர்தல் ஆணையரும் 2 ஆணையர்களும் பங்கேற்றனர். அரசியல் சட்டப்படி சுயாதிகாரம் கொண்ட தேர்தல் ஆணையர்களை பிரதமரின் செயலாளர் அழைத்துப் பேசியதால் சர்ச்சை எழுந்துள்ளது.

தேர்தல் ஆணையர்களுடன் விவாதித்தது என்ன?

தலைமை தேர்தல் ஆணையர், ஆணையர்களுடன் பொது வாக்காளர் பட்டியல் குறித்து செயலர் விவாதித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போது நாடாளுமன்ற, சட்டமன்ற, உள்ளாட்சி தேர்தல்களுக்கு தனித்தனி வாக்காளர் பட்டியல் தயாரிக்கப்படுகிறது. 3 வாக்காளர் பட்டியல்களுக்கு பதில் ஒரே வாக்காளர் பட்டியல் அறிமுகப்படுத்தப்படும் என பாஜக உறுதி அளித்துள்ளது. தேர்தல் வாக்குறுதியை செயலாக்க ஒரே வாக்காளர் பட்டியல் தயாரிக்க ஆணையர்களுடன் பிரதமரின் செயலர் விவாதித்துள்ளார். தற்போது ஜன. 1-ம் தேதி 18 வயது நிறைவடைவோர் மட்டுமே வாக்காளர் பட்டியலில் சேர்க்க வகை செய்யப்பட்டு உள்ளது.

ஜன.1-ல் மட்டுமல்லாமல் ஏப்., ஜூலை, அக் 1-ம் தேதிகளில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க வகை செய்வது பற்றியும் விவாதம் செய்துள்ளார். ஏற்கனவே ஆக.13, செப்., 3 ஆகிய தேதிகளில் தேர்தல் ஆணைய அதிகாரிகளுடன் மட்டுமே முதன்மை செய்யாலர் விவாதித்துள்ளார். முந்தைய கூட்டங்களில் தலைமை தேர்தல் ஆணையரோ, இதர 2 ஆணையாளர்களோ கலந்து கொள்ளவில்லை.

Related Stories: