புதுக்கோட்டை, டெல்டா மாவட்டங்களில் இன்றும், நாளையும் மழை பெய்யக்கூடும்: 24 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி: வானிலை அறிக்கை

சென்னை: வடகிழக்கு பருவக்காற்றின் காரணமாக தமிழ்நாட்டில் இன்று மழைக்கு வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டின் தெற்கு கடலோர மாவட்டங்கள், புதுக்கோட்டையில் இன்றும், நாளையும் மழை பெய்யும் என கூறப்பட்டுள்ளது. தஞ்சை, நாகை, திருவாரூர், மயிலாடுதுறை மாவட்டங்களிலும் மழை பெய்யக்கூடும் என கூறப்பட்டுள்ளது. காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. டிச.19-ல் வடகடலோர மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் மழை பெய்யக்கூடும் என அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. டிச. 20, 21-ல் தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலையே நிலவும் என குறிப்பிடப்பட்டுள்ளது. தென்கிழக்கு வங்கக் கடலில் இன்று குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது. அடத்த 24 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்பு உள்ளது.

இன்று முதல் டிச.20-வரை குமரிக்கடல், தெற்கு, தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் பலத்த சூறாவளி வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தல் செய்யப்பட்டுள்ளது. டிச.20-ல் தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதையொட்டிய அந்தமான் பகுதிகளிலும் பலத்த சூறாவளி வீச வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டுள்ளது. மணிக்கு 45 முதல் 65 கி.மீ. வேகத்தில் பலத்த சூறாவளி வீச வாய்ப்புள்ளதால் அடுத்த 3 நாட்களுக்கு மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.  சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என வானிலை மையம் கூறியுள்ளது.

Related Stories: