×

வெளிநாடுகளில் இருந்து தமிழ்நாடு வந்த 70 பயணிகளுக்கு கொரோனா; 28 பேருக்கு ஒமிக்ரான் அறிகுறியாக S-ஜீன் தொற்று உள்ளது: அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி

சென்னை: வெளிநாடுகளில் இருந்து தமிழ்நாடு வந்த 70 பயணிகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டியளித்தார். கொரோனா தொற்று உள்ள 70 பேரில் 28 பேருக்கு ஒமிக்ரான் அறிகுறியாக S-ஜீன் தொற்று உள்ளது என கூறினார். 7 நாட்கள் தனிமைப்படுத்தலுக்கு பின்பு தொற்று இல்லை என்றால் பிரச்சனையில்லை எனவும் கூறினார். கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ள 70 பேருக்கான மரபணு சோதனையில் 10 பேரின் முடிவுகள் வந்துள்ளன. 10 பேரில் 8 பேருக்கு டெல்டா வகை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. புதிய கட்டுப்பாடுகள் விதிக்க மத்திய அரசிடம் அனுமதி கேட்க உள்ளோம் எனவும் தெரிவித்தார்.

கடந்த 15-ம் தேதி தமிழ்நாட்டில் ஒருவருக்கு ஒமிக்ரான் தொற்று கண்டறியப்பட்டுள்ளது என அமைச்சர் கூறினார். ஒமிக்ரான் தொற்று பாதிக்கப்பட்டவருடன் தொடர்பில் இருந்த மற்ற 7 பேருக்கு மரபணு மாற்றம் அடைந்த தொற்று கண்டறியப்பட்டது. ஒமிக்ரான் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த மாவட்ட ஆட்சியர்களுக்கு மருத்துவத்துறை செயலாளர் அறிவுறுத்தியுள்ளார். கொரோனா தடுப்பூசி பணிகளை வேகப்படுத்த வேண்டும், பொது இடங்களில் மக்கள் முகக்கவசம் அணிவதை மாவட்ட ஆட்சியர்கள் உறுதி செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார். ஒமிக்ரான் தொற்று உள்ளவர் உட்பட 13 பேர் கிங்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். காங்கோவில் இருந்து வந்து ஆரணி சென்ற பெண்ணுக்கு நேற்று கொரோனா கண்டறிப்பட்டது.  ஆரணி சென்ற பெண்ணுக்கு ஒமைக்ரானுக்கு முந்தைய அறிகுறி தெரிவதால் மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.


Tags : Corona ,Tamil Nadu ,Minister ,Ma Subramaniam , 70 peoples, corona, tamilnadu, minister
× RELATED உலகப் பத்திரிகை சுதந்திர நாளை ஒட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து..!!