×

குன்னூர் ஹெலிகாப்டர் விபத்து: கேப்டன் வருண் சிங்கின் உடலுக்கு முழு ராணுவ மரியாதையுடன் இறுதிச்சடங்கு

போபால்: ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த குரூப் கேப்டன் வருண் சிங்கின் உடலுக்கு மத்தியப்பிரதேசத்தில் ராணுவ மரியாதையோடு இறுதிச்சடங்கு நடைபெறுகிறது.நீலகிரி மாவட்டம் குன்னூரில் நடந்த ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் பயணம் செய்த 14 பேரில் முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத் உள்பட 13 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதில் பலத்த தீக்காயங்களுடன் மீட்கப்பட்ட விமானப்படை குரூப் கேப்டன் வருண் சிங் பெங்களூரு ராணுவ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். குன்னூர் அருகே ஹெலிகாப்டர் விபத்தில் கடுமையான தீக்காயங்களுடன் உயிர் பிழைத்திருந்த ஒரே நபர் குரூப் கேப்டன் வருண் சிங். ஆனால் பெங்களூரு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்ததை தொடர்ந்து அவருடைய சொந்த ஊருக்கு அவரது உடல் கொண்டுவரப்பட்டுள்ளது.

கடந்த 15-ம் தேதி வருண் சிங் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது உடல் நேற்று முன்தினம் யேலஹங்கா விமானப்படை நிலையத்துக்கு கொண்டு வரப்பட்டு பின்னர் அங்கிருந்து விமானம் மூலம் வருண்சிங்கின் சொந்த ஊரான மத்தியபிரதேச தலைநகர் போபாலுக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு வருண்சிங் உடலுக்கு அம்மாநில முதலமைச்சர் சிவராஜ்சிங் சவுகான் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.

ஏற்கனவே பெங்களூரு, போபால் ஆகிய இடங்களில் ராணுவ மரியாதை மற்றும் அரசு மரியாதை செய்யப்பட்டுள்ளது. அவருடைய குடும்பத்தை சேர்ந்த ஒருவருக்கு மாநில அரசு பணி அளிக்கும் என்றும் ஒரு கோடி ரூபாய் அவரது குடும்பத்திற்கு உதவித்தொகை அளிக்கப்படும் என்றும் முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் அறிவித்துள்ளார். அதன்பிறகு தற்போது அவரின் சொந்த ஊரிலே இறுதி சடங்குகள் மற்றும் இறுதி மரியாதை செலுத்துவதற்காக அவரது உடல் கொண்டுவரப்பட்டுள்ளது. முழு ராணுவ மரியாதையுடன் மற்றும் அரசு அதிகாரிகள், பொதுமக்கள் ஆகியோருடன் அவருக்கு பிரியாவிடை கொடுக்கப்படுகிறது.

Tags : Varun Singh , varun singh
× RELATED குன்னூர் ராணுவ ஹெலிகாப்டர் விபத்து...