×

தமிழக இளைஞர் காங்கிரசில் 7.19 லட்சம் பேர் இணைந்துள்ளனர்: தேர்தல் நடத்தும் அதிகாரி ராஜூ பி.நாயர் அறிவிப்பு

சென்னை: வாக்குப்பதிவுடன் கூடிய உறுப்பினர் சேர்க்கை நேற்று மாலையுடன் முடிவடைந்த நிலையில், 7.19 லட்சம் இளைஞர்கள், தமிழக இளைஞர் காங்கிரசில் இணைந்துள்ளதாக தேர்தல் நடத்தும் அதிகாரி ராஜூ பி.நாயர் தெரிவித்துள்ளார். தமிழக இளைஞர் காங்கிரஸ் தலைவராக உள்ள ஹசன் மவுலானா எம்எல்ஏவின் பதவிக் காலம் முடிவடைந்ததை தொடர்ந்து புதிய தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இளைஞர் காங்கிரஸ் தேர்தலை பொறுத்தவரை இந்த முறை புது முயற்சியாக செல்போன் ஆப் மூலம் நடத்தப்பட்டு வருகிறது.

அத்துடன் புதிய உறுப்பினர் சேர்க்கையும் இதன் மூலமே நடைபெற்று வருகிறது. அதாவது, புதிய உறுப்பினர்களாக சேருகிறவர்களும் ஆப் மூலம் மட்டுமே கட்சியில் இணைய முடியும். அவர்களும் நிர்வாகிகளை தேர்வு செய்யும் வகையில் வாக்களிக்கலாம். இந்த முறையில் இளைஞர் காங்கிரஸ் தேர்தல் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், தமிழகத்தில் கடந்த மாதம் 8ம்தேதி முதல் வாக்குப்பதிவுடன் கூடிய உறுப்பினர் சேர்க்கை நடந்து வந்தது. இது நேற்று மாலை 6 மணியுடன் நிறைவடைந்தது. இளைஞர் காங்கிரஸ் உறுப்பினர் சேர்க்கை இயக்கத்தில் 7.19 லட்சம் இளைஞர்கள் இணைந்துள்ளதாக, உள்கட்சித் தேர்தல் நடத்தும் பிரதேச தேர்தல் அதிகாரி ராஜு பி.நாயர் தெரிவித்துள்ளார்.

Tags : Tamil Youth Congress ,Officer ,Rajoo B. ,Nair , Tamil Nadu Youth, Congress, Returning Officer, Raju P. Nair
× RELATED ஜோலார்பேட்டை அருகே பரபரப்பு...