×

காவலர்களின் வாரிசுகள் 800 பேருக்கு கருணை பணி: டிஜிபி சைலேந்திர பாபு தகவல்

திருச்சி: உங்கள் துறையில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ் காவல் துறையில் குறைதீர்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது.  திருச்சி மத்திய மண்டலத்திற்கான காவலர் குறைதீர் கூட்டம் நேற்று நடைபெற்றது.  நாகை, மயிலாடுதுறை, திருவாரூர், தஞ்சாவூர், கரூர், பெரம்பலூர், அரியலூர், புதுகை, திருச்சி, ஆகிய 9 மாவட்டங்களை சேர்ந்த காவலர்கள் பங்கேற்றனர். தமிழக டிஜிபி சைலேந்திரபாபு கலந்து கொண்டு 1069 காவலர்களிடம் குறைகேட்டு மனுக்களை பெற்றார்.

அப்போது அவர் பேசுகையில், 2020 வரை காவலர்களின் வாரிசுகள் 800 பேருக்கு கருணை அடிப்படையில் பணி வழங்கப்பட்டுள்ளது. மேலும் 800 பேருக்கு வாரிசு பணி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். மதுரை: தென்மண்டல அளவில் மதுரை ஆயுதப்படை மைதானத்தில் நடந்த குறைதீர் கூட்டத்தில், மதுரை, விருதுநகர், திண்டுக்கல், தேனி, ராமநாதபுரம், சிவகங்கை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களின் போலீசார் 692 பேர் டிஜிபி சைலேந்திரபாபு விடம் மனுக்கள் கொடுத்தனர்.


Tags : DGB ,Zylandra Babu , Heir to the Guards, Mercy Mission, DGP Silent Babu
× RELATED அயோத்தி கோயில் விழா ஒளிபரப்பு.....