×

சென்னையில் 719 மகளிர் சுயஉதவிக்குழுக்களை சேர்ந்த 10,785 பயனாளிகளுக்கு ரூ.28.85 கோடி வங்கிக்கடன்: அமைச்சர்கள் கே.என்.நேரு, பி.கே.சேகர்பாபு வழங்கினர்

சென்னை: சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 719 மகளிர் சுயஉதவிக் குழுக்களை சேர்ந்த 10,785 பயனாளிகளுக்கு சுயதொழில் புரிவதற்கு ஏதுவாக ரூ.28.85 கோடி வங்கிக்கடன் உதவியை அமைச்சர்கள் கே.என்.நேரு, பி.கே.சேகர்பாபு வழங்கினர். சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 719 மகளிர் சுயஉதவிக் குழுக்களை சேர்ந்த 10,785 பயனாளிகளுக்கு சுயதொழில் புரிவதற்கு ஏதுவாக ரூ.28.85 கோடி வங்கிக்கடன் உதவியை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு ரிப்பன் மாளிகையில் நடந்த நிகழ்ச்சியில் வழங்கினர்.

நிகழ்ச்சியில், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு பேசுகையில், ‘‘சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள 719 மகளிர் சுயஉதவிக் குழுக்களை சேர்ந்த 10,785 பயனாளிகளுக்கு சுயதொழில் புரிய ஏதுவாக ரூ.28.85 கோடி வங்கிக்கடன் உதவியும், PM ஸ்வா நிதி திட்டத்தில் சாலையோர வியாபாரிகள் தொழில் புரிய ஏதுவாக ஒரு பயனாளிக்கு ரூ.10,000 வீதம் 50 பேருக்கு  ரூ.5 லட்சமும் கடனுதவியாக வழங்கப்படுகிறது’’ என்றார்.  இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு பேசுகையில், ‘‘ முதல்வர் பதவியேற்ற 7 மாத காலத்திற்குள்ளாகவே அதாவது, 13ம் தேதியன்று திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் நடந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு முழுவதும் 58,463 மகளிர் சுயஉதவிக் குழுக்களை சார்ந்த 7,56,142 பயனாளிகளுக்கு ரூ.2,750 கோடி வங்கிக்கடன் உதவிகளை வழங்கினார். எனவே, சமூகத்தில் மகளிர் தன்னம்பிக்கையோடு வாழ  அரசு எப்போதும் உறுதுணையாக இருக்கும். இவ்வாறு கூறினர்.

நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர்கள் தாயகம் கவி,  எம்.கே.மோகன், ஆர்.டி.சேகர், த.வேலு, பரந்தாமன், ஜோசப் சாமுவேல், எபினேசர்,  ஏ.எம்.வி.பிரபாகர ராஜா, ஐட்ரீம் மூர்த்தி, கணபதி, ஜே.எம்.எச்.ஹசன் மவுலானா,  நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை செயலாளர் சிவ்தாஸ் மீனா,  சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி  உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Chennai ,Ministers ,KN Nehru ,BK Sekarbabu , Chennai, Women's Self Help Group, Bank Loan, Minister, KN Nehru, PK Sekarbabu
× RELATED நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வருவதால்...