×

உயர் நீதிமன்ற வக்கீல்கள் சங்க தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல் வெளியிட கூடாது: மேல்முறையீட்டில் ஐகோர்ட் உத்தரவு

சென்னை: சென்னை உயர் நீதிமன்ற வக்கீல்கள் சங்கத்திற்கான தலைவர், துணைத் தலைவர், செயலாளர், பொருளாளர், நூலகர் மற்றும் மூத்த மற்றும் இளைய செயற்குழு உறுப்பினர்களுக்கான தேர்தல் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே, இந்த தேர்தலில் போட்டியிடும் தலைவர் உள்ளிட்ட அனைத்து நிர்வாகிகளுக்கும் தகுதி நிர்ணயம் செய்து நீதிபதிகள் கிருபாகரன், பொங்கியப்பன் ஆகியோர் அடங்கிய அமர்வு கடந்த 3 மாதங்களுக்கு முன்பு உத்தரவிட்டிருந்தது. அதில், தேர்தலில் போட்டியிடுபவர்கள் எத்தனை ஆண்டுகள் வக்கீலாக தொழில் செய்திருக்க வேண்டும், அவர்கள் எத்தனை வழக்குகளில் ஆஜராகியிருக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு சரத்துக்கள் இடம்பெற்றிருந்தன.

இந்த தகுதி நிர்ணயத்தால் ஏராளமான வக்கீல்கள் தேர்தலில் போட்டியிட முடியாத நிலை உருவானது. இதற்கிடையை தேர்தலுக்கான வாக்காளர் பட்டியலை இன்று வெளியிட தேர்தலை நடத்தும் கமிட்டி முடிவு செய்தது.  இதையடுத்து, நீதிபதி கிருபாகரன் தலைமையிலான அமர்வு பிறப்பித்த உத்தரவு மறு ஆய்வு மனுவை தாக்கல் செய்ய உள்ளதாகவும் எனவே, வாக்காளர் பட்டியலை வெளியிட தடை விதிக்க வேண்டும் என்றும் கோரி வழக்கறிஞர்கள் சத்யபால்  தற்போதைய தலைவர் ஜி.மோகனகிருஷ்ணன், தற்போதைய நூலகர் ஜி.ராஜேஷ், மற்றும் வழக்கறிஞர்கள் சத்யபால், காணிக்கை நாதன் ஆகியோர் நேற்று நீதிபதி எம்.துரைசாமி அடங்கிய இரண்டாவது அமர்வில் முறையீடு செய்தனர்.

அதனை ஏற்ற நீதிமன்றம் ஜனவரி 7ம் தேதி வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும். அதுவரை தேர்தலை நடத்தும் கமிட்டி தேர்தல் நடைமுறைகளை நிறுத்தி வைக்க வேண்டும் என்று வாய்மொழியாக உத்தரவிட்டனர்.


Tags : High Court Advocates Association ,ICC , High Court, Bar Association Election, Voter List, Order
× RELATED டி20 உலக கோப்பை தொடருக்காக எய்டன்...