உலக சாம்பியன்ஷிப் பேட்மின்டன் சிந்து காலிறுதிக்கு முன்னேற்றம்

ஹூவல்வா: உலக சாம்பியன்ஷிப் பேட்மின்டன் போட்டி ஸ்பெயினில் நடக்கிறது. அங்கு நேற்று காலிறுதிக்கு முந்தைய 3வது சுற்று ஆட்டங்கள் நடந்தன. மகளிர் ஒற்றையர் பிரிவில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து(26வயது, 7வது ரேங்க்), தாய்லாந்து வீராங்கனை போர்ன்பவீ சோசுவாங்(23வயது, 10வது ரேங்க்) ஆகியோர் மோதினார். முதல் செட்டை 21-14 என்ற புள்ளிக் கணக்கில் எளிதில் கைப்பற்றினார். தொடர்ந்து 2வது செட்டை கைப்பற்ற இரண்டு தரப்பிலும் கடுமையாக போராடினர். சிந்து தொடர்ந்து முன்னிலையில் இருந்தாலும் ஒருக்கட்டத்தில் 19-18 என்ற புள்ளக் கணக்கில் போர்ன்பவீ நெருங்கினார். ஆனாலும் சமாளித்து விளையாடிய சிந்து அந்த செட்டை 21-18 என்ற கணக்கில் வசப்படுத்தினார். அதனால் 48 நிமிடங்கள் நடந்த ஆட்டதை 2-0 எனநேர் செட்களில் வென்று காலிறுதிக்கு சிந்து முன்னேறினார்.

Related Stories: