×

திருப்பரங்குன்றம் அருகே ஆபத்தான முறையில் நான்கு வழி சாலையை கடக்கும் மாணவர்கள்

திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் அருகில் உள்ள வலையங்குளம் பகுதியில் தினந்தோறும் அச்சத்துடன் மாணவ-மாணவிகள் நான்குவழி சாலையை கடந்து பள்ளிக்கு சென்று வருகின்றனர். மதுரை திருப்பரங்குன்றம் அருகில் உள்ளது வலையங்குளம். இப்பகுதியில் சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இங்கு அரசு உயர்நிலை பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் இப்பகுதியை சேர்ந்த சுமார் 400க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளிக்கு மாணவர்கள் தூத்துக்குடி தேசிய நான்கு வழிச்சாலையை கடந்து சென்று வருகின்றனர். நான்குவழி சாலையில் அதிவேகத்தில் செல்லும் வாகனங்களால் மாணவர்கள் ஒருவித அச்சத்துடனே சாலையை கடந்து செல்கின்றனர்.

அவ்வப்போது மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் விபத்தில் சிக்கி வருகின்றனர். கடந்த 4 ஆண்டுகளில் 20 க்கும் மேற்பட்டோர் விபத்தில் சிக்கி பலியாகியுள்ளனர். நான்கு வழிச்சாலை என்பதால் பொதுமக்கள் கடந்து செல்ல பாலம் கட்டுவதற்கும் வாய்ப்பு குறைவாக உள்ளது. எனவே தினமும் காலை, மாலை வேளைகளில் பள்ளி மாணவர்கள் சாலையை கடக்க உதவியாக போக்குவரத்து காவலர்களை நியமிக்க வேண்டும். மேலும் நான்கு வழிச்சாலை பகுதியில் ஒளிரும் எச்சரிக்கை விளக்குகளை அமைக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Thiruparankundram , Students crossing a dangerous four-lane road near Thiruparankundram
× RELATED 1.5 ஆண்டுகளுக்குப் பிறகு...