தென்பெண்ணை ஆற்றில் தடுப்பணை பாலத்தின் இரண்டு கரைகளிலும் அரிப்பு

கடலூர்: தென்பெண்ணை ஆற்றில் இருந்து மாதக்கணக்கில் தண்ணீர் வீணாவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. கடலூர் வழியாக செல்லும் தென்பெண்ணை ஆற்றில் கடந்த நவம்பர் மாதம் தொடங்கி தற்போது வரை தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இந்த நிலையில் புதுச்சேரி மாநில அரசால் கட்டப்பட்ட தடுப்பணை பாலத்தின் இரண்டு கரைகளிலும் அரிப்பு ஏற்பட்டுள்ளது. பாலத்தின் ஒருகரை கடலூர் மாவட்டத்தின் கட்டுப்பாட்டிலும், புதுச்சேரி மாநில அரசு கட்டுப்பாட்டிலும் உள்ளது. கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே கரை அரிப்பை கடலூர் மாவட்ட நிர்வாகம் தற்காலிகமாக சரி செய்துள்ளது.

அதே நேரத்தில் புதுச்சேரி மாநில பகுதியில் இருக்கும் கரை இதுவரை சரி செய்யப்படாத காரணத்தால் தண்ணீர் வீணாக கடலுக்கு தொடர்ந்து சென்று கொண்டுள்ளது. இதுவரை தென்பெண்ணை ஆற்றில் மட்டும் 50 டிஎம்சிக்கும் அதிகமான நீர் வீணாக கடலுக்குள் சென்றிருக்கலாம் என்று கூறப்படுகிறது. நீர் வீணாவதை தடுக்க இருமாநில அரசுகளும் இணைந்து செயல்பட வேண்டும் என்றும் மக்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.

Related Stories: