×

திருச்செந்தூர் - பாலக்காடு ரயில் இன்று முதல் இயக்கம்

நெல்லை: திருச்செந்தூர் - பாலக்காடு எக்ஸ்பிரஸ் ரயில், கொரோனா காலத்திற்கு பின்னர் இன்று  (16ம் தேதி) முதல் இயக்கப்படுகிறது.திருச்செந்தூர் - பாலக்காடு (வண்டி எண் 16732) முன்பதிவில்லாத விரைவு ரயில் இன்று (16ம் தேதி) முதல் திருச்செந்தூரிலிருந்து மதியம் 12.05 மணிக்கு புறப்பட்டு இரவு 10.30 மணிக்கு பாலக்காடு சென்று சேரும். மறுமார்க்கத்தில் (வண்டி எண் 16731) பாலக்காடு - திருச்செந்தூர் முன்பதிவில்லாத விரைவு ரயில் நாளை (17ம் தேதி) முதல் பாலக்காட்டில் இருந்து அதிகாலை 4.55 மணிக்கு புறப்பட்டு மாலை 3.45 மணிக்கு திருச்செந்தூர் வந்து சேரும்.

இந்த ரயில்கள் பாலக்காடு டவுன், புதுநகரம், கொல்லங்கோடு, முதலமடா, மீனாட்சிபுரம், பொள்ளாச்சி, கோமங்கலம், உடுமலைப்பேட்டை, பழனி, ஒட்டன்சத்திரம், திண்டுக்கல், அம்பாத்துரை, கொடைக்கானல் ரோடு, சோழவந்தான், மதுரை, திருப்பரங்குன்றம், திருமங்கலம், விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி, கடம்பூர், வாஞ்சி மணியாச்சி, தாழையூத்து, திருநெல்வேலி, பாளையங்கோட்டை, ஆழ்வார்திருநகரி, நாசரேத் கச்சனாவிளை, குரும்பூர், ஆறுமுகநேரி, காயல்பட்டினம் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.
இந்த ரயில் நேற்று (15ம் தேதி) முதல் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்திருந்தது. பின்னர் ரயில் இயக்கப்படும் தேதி மாற்றப்பட்டு, இன்று முதல் இயக்கப்படுகிறது.

குருவாயூர் எக்ஸ்பிரஸ் எர்ணாகுளம் வரை மட்டுமே செல்லும்
சென்னையில் இருந்து நெல்லை வழியாக இயக்கப்படும் குருவாயூர் எக்ஸ்பிரஸ் 3 தினங்களுக்கு எர்ணாகுளம் வரை மட்டுமே செல்லும். சென்னையில் இருந்து மதுரை, நெல்லை, நாகர்கோவில் வழியாக குருவாயூருக்கு தினசரி எக்ஸ்பிரஸ் (எண்.16127) இயக்கப்பட்டு வருகிறது. தற்போது திருவனந்தபுரம் கோட்டத்தில் பராமரிப்பு குருவாயூர் - எர்ணாகுளம் இடையே நடந்து வருகிறது. எனவே சென்னையில் இருந்து புறப்படும் குருவாயூர் எக்ஸ்பிரஸ் இன்று (16ம் தேதி), 17 மற்றும் 19ம் தேதிகளில் எர்ணாகுளம் வரை மட்டுமே செல்லும். அதாவது எர்ணாகுளம் முதல் குருவாயூர் வரை பகுதி தூரம் அந்த ரயில் ரத்து செய்யப்படுகிறது. ஆனால் மறுமார்க்கமாக இந்த ரயில் குருவாயூரில் இருந்து சென்னை வரை இயக்கப்படுகிறது.

Tags : Thiruchendur ,Palakkad , Thiruchendur - Palakkad train will run from today
× RELATED பள்ளிகள் விடுமுறையையொட்டி...