×

சாணார்பட்டி பகுதியில் பெயர்ந்து வரும் பாதயாத்திரை பாதை: தரமற்ற பணியே காரணமென புகார்

கோபால்பட்டி:  பழநி ேகாயில் தைப்பூச திருவிழாவிற்கு  ராமநாதபுரம், சிவகங்கை, காரைக்குடி பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான  பக்தர்கள் பாதயாத்திரையாக சாணார்பட்டி வழியாக செல்வது வழக்கம். அப்போது  திண்டுக்கல்- நத்தம் சாலையில் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுவதுடன்,  பக்தர்கள் விபத்திலும் சிக்கி வந்தனர். இதனை தவிர்க்கவும், பக்தர்கள்  வசதிக்காகவும் திண்டுக்கல்- நத்தம் சாலையோரம் ரூ.பல லட்சம் செலவில் நடைபாதை  அமைத்து, அதில் வண்ண கற்கள் பதித்து வருகின்றனர்.

இவ்வாறு பதிக்கப்பட்ட  வண்ண கற்கள் தரமற்ற பணியால் சாணார்பட்டி பகுதியில் ஆங்காங்கே பெயர்ந்தும்,  சிதிலமடைந்தும் வருகிறது. இதனால் பக்தர்கள் சிரமமப்படும் நிலை  ஏற்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பாதயாத்திரை நடைபாதையை தரமாக  அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Pathayathri route ,Sanarpatti , Transfer Pathayathri route in Sanarpatti area: Complaint due to poor workmanship
× RELATED கிணற்றில் தவறி விழுந்த ஜல்லிக்கட்டு காளை மீட்பு