முப்படை தளபதிகள் குழுவின் தலைவராக ராணுவ தளபதி நரவானே நியமனம்

டெல்லி: முப்படை தளபதிகள் குழுவின் தலைவராக ராணுவ தளபதி எம்.எம் நரவானே நியமிக்கப்பட்டுள்ளார். முப்படைகளின் தலைமை தளபதி தேர்வு செய்யப்படும் வரை குழுவின் தலைவராக நரவானே செயல்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஹெலிகாப்டர் விபத்தில் முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் காலமான நிலையில் இடைக்கால ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

முப்படை தளபதிகளின் குழுவிற்கு தலைவராக ராணுவ தளபதி நியமிக்கப்பட்டுள்ளார். முப்படைகளின் தளபதிகளிலே ராணுவ தளபதி நரவானே முதலில் நியமிக்கப்பட்டவர். அதற்கு பின்னர் தான் விமான படை தளபதி, கப்பல் படை தளபதி ஆகியோர் நியமிக்கப்பட்டனர். எனவே ராணுவ தளபதி நரவானே முப்படைகள் தளபதிகள் குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். தலைமை ராணுவ தளபதியாக இருந்த பிபின் ராவத் முப்படைகளின் தளபதியாக நியமிக்கப்படுவதற்கு முன்னாள் இந்த பதவியில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இது முப்படைகளுக்கு இடையே ஒருங்கிணைப்பை ஏற்படுத்த முக்கிய பதவியாக கருதப்படுகிறது. முப்படைகளின் தலைமை தளபதியாக ஒருவர் நியமிக்கப்படும் வரை இந்த ஏற்பாடு தொடரும் என பாதுகாப்பு துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Related Stories: