தமிழக போலீசார் 203 பேருக்கு விருது அறிவிப்பு

சென்னை: தமிழக போலீசில் சிறப்பாக பணிபுரிந்த 74 பேருக்கு ஒன்றிய அரசின் அதிஉத்கிரிஸ்த் சேவா பதக்கம் மற்றும் 129 பேருக்கு உத்கிரிஸ்த் சேவா பதக்கமும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஒன்றிய உள்துறை அமைச்சகம் சார்பில் தமிழக போலீசில் சிறப்பாக பணிபுரிந்த 203 பேருக்கு விருது அறிவிக்கப்பட்டுள்ளது. அதி உத்கிரிஸ்த் சேவா பதக்கம் சென்னை விஜிலென்ஸ்  கூடுதல் எஸ்பி பிருத்விராஜன், இன்ஸ்பெக்டர்கள் கோபால், ராஜகேசர், எஸ்.ஐகள் யுவராஜ், ஆர்.சீனிவாசன், பி.சீனிவாசன், தயாளன், தேவேந்திரன்; சிறப்பு எஸ்ஐகள் சித்ரா, ரவி, ராமமூர்த்தி, விஜயகுமார், குணசேகரன், மாசிலா மணி ஆகியோருக்கு வழங்கப்படுகிறது.

உத்கிரிஸ்த் சேவா பதக்கம் சென்னையில் ஏஐஜி சரவணன், எஸ்பி சாமிநாதன், டிஎஸ்பி ஜான்லியோ; இன்ஸ்பெக்டர் வேலவன், சங்கு, ராஜீவ் பிரின்சி ஆரோன், அமல் ஸ்டான்லி ஆனந்த், மாதேஸ்வரன், பண்டாரசுவாமி, ஹெமலதா, பன்னீர்செல்வம், சந்துரு, ஜானகிராமன் உள்ளிட்டோருக்கு வழங்கப்படுகிறது.

Related Stories: