×

கிண்டி அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் 31ம் தேதி வரை நேரடி மாணவர் சேர்க்கை: கலெக்டர் விஜயா ராணி அறிவிப்பு

சென்னை:  சென்னை மாவட்ட ஆட்சியர் விஜயா ராணி வெளியிட்ட அறிக்கை: 2021ம் ஆண்டிற்கு கிண்டி, அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் பொறியியல் அல்லாத தொழிற்பிரிவுகளில் காலியாக உள்ள இருக்கைகளில் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு வாய்ப்பு தரும் விதமாக நேரடி சேர்க்கை 31ம் தேதி வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. இத்தொழிற்பயிற்சி நிலையத்தில் சேர விரும்பும் தகுதியுள்ள மாணவர்கள் இத்தொழிற்பயிற்சி நிலையத்திற்கு நேரடியாக வருகை புரிந்து 31ம் தேதி வரை பயிற்சியில் சேரலாம்.

கிண்டி, அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் தகுதி பெற்று சேரும் மாணவர்களுக்கு அரசால் கட்டணமில்லா பயிற்சி, விலையில்லா மடிகணினி, விலையில்லா மிதிவண்டி, கட்டணமில்லா பேருந்து பயணச்சலுகை, விலையில்லா பாடப்புத்தகம், விலையில்லா சீருடை, விலையில்லா வரைபட கருவிகள் மற்றும் மாதாந்திர உதவித்தொகை ரூ750 வழங்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அதில்  கூறப்பட்டுள்ளது.

Tags : Government Vocational Training Center ,Collector ,Vijaya Rani , Direct Student Admission to Government Vocational Training Center, Kindi till 31st: Announcement by Collector Vijaya Rani
× RELATED மதுரை மாவட்டத்தில் உள்ள கல்குவாரிகள்...