×

பொட்டாஷ் உர விலையை குறைக்க ஒன்றியஅரசுக்கு அழுத்தம் தரவேண்டும்: விஜயகாந்த் வலியுறுத்தல்

சென்னை:  தேமுதிக தலைவர் விஜயகாந்த் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: பொட்டாஷ் உரம் விலை உயர்வால் விவசாயிகளின் வாழ்வாதாரமும் கேள்விக்குறியாகியுள்ளது. 50 கிலோ பொட்டாஷ் மூட்டை ஒன்றுக்கு ரூ1040க்கு விற்கப்பட்ட நிலையில், தற்போது புதிதாக வந்துள்ள ஒரு மூட்டை பொட்டாஷ் ரூ1700க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரே சமயத்தில் மூட்டைக்கு ரூ660 உயர்த்தப்பட்டுள்ளது. ஏற்கனவே பல்வேறு பிரச்னைகளுக்கு இடையே விவசாயம் செய்து வரும் நிலையில் பொட்டாஷ் விலை உயர்வால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஒரு பக்கம் மழை வெள்ள பாதிப்பு, மறு பக்கம் உரம் விலை உயர்வால் விவசாயிகள் விழிபிதுங்கி நிற்கின்றனர். எனவே ஒன்றிய அரசு மானிய தொகையை உயர்த்தி வழங்கி, பழைய விலைக்கே பொட்டாஷ் உரம் விற்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் உரங்கள் தட்டுப்பாடின்றி கிடைக்க வழிவகை செய்ய வேண்டும். பொட்டாஷ் உர விலையை குறைக்க ஒன்றிய அரசுக்கு தமிழக அரசும் அழுத்தம் கொடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags : Vijayakand , Vijayakand urges govt to reduce potash fertilizer prices
× RELATED அனல் பறக்கும் தமிழக தேர்தல் களம்: நாளை...