×

எம்பில், பிஎச்டி படித்து வரும் கல்லூரி மாணவிகளுக்கும் 240 நாள் மகப்பேறு விடுப்பு: யுஜிசி உத்தரவு

புதுடெல்லி: எம்பில், பிஎச்டி போன்ற உயர்கல்வி படிக்கும் மாணவிகளுக்கும் அவர்களின் படிப்பு காலத்தில் ஒருமுறை 240 நாட்கள் மகப்பேறு விடுப்பு வழங்க வேண்டுமென பல்கலைழக் கழக மானிய குழு (யுஜிசி) உத்தரவிட்டுள்ளது.
இது குறித்து பல்கலைக் கழக மானியக் குழுவின் செயலாளர் ரஜினிஷ் ஜெயின், அனைத்து பல்கலைக் கழகங்களின் துணை வேந்தர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: யுஜிசி சட்டம் 2016-ன் படி, எம்.பில்., பி.எச்டி. படிப்புகளைப் படித்துவரும் மாணவிகளுக்கு மகப்பேறு விடுப்பு கட்டாயம் வழங்கப்பட வேண்டும். அவர்களின் படிப்புக் காலத்தின் போது 240 நாட்கள் வரை மகப்பேறு அல்லது குழந்தை பராமரிப்பு விடுப்பு வழங்கலாம்.

இதற்காக, அனைத்து உயர் கல்வி நிலையங்களும் தங்களின் நிறுவனங்கள், கட்டுப்பாட்டில் இயங்கும் கல்லூரிகளில் படிக்கும் மாணவிகளுக்கு மகப்பேறு விடுப்பை வழங்க உரிய விதிமுறைகளை வகுக்க வேண்டும். சம்பந்தப்பட்ட மாணவிகளுக்கு தேர்வுகால சலுகைகள், வருகைப் பதிவேடுகளில் சலுகைகள் வழங்கிட ஏதுவாகவும் உரிய விதிகளை வகுக்க வேண்டும். இது தொடர்பாக இளங்கலை மற்றும் முதுகலை படிப்பைப் படிக்கும் மாணவிகளுக்குத் தேவை கருதி பிற வசதிகளையும் செய்து கொடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags : UGC , 240 days maternity leave for college students pursuing Ph.D., UGC order
× RELATED இளநிலை பட்டப்படிப்பில் 75% மதிப்பெண்...