பிரைம் வாலிபால் லீக் ஏலம் சென்னை பிளிட்ஸ் அணியில் அகின், நவீன் ராஜா ஒப்பந்தம்

கொச்சி: பிரைம் வாலிபால் லீக் தொடருக்கான வீரர்கள் ஏலத்தில், சென்னை பிளிட்ஸ் அணி சர்வதேச வீரர்கள் அகின், நவீன் இருவரையும் அதிக தொகைக்கு ஒப்பந்தம் செய்துள்ளது. கொச்சியில் நடைபெற்ற ஏலத்தில் பிளாட்டினம், தங்கம், வெள்ளி, வெண்கலம், 21 வயதுக்குட்பட்டோர் என 5 பிரிவுகளில் மொத்தம் 400 வீரர்கள் இடம் பெற்றனர். சென்னை பிளிட்ஸ் அணி அதிகபட்சமாக ரூ.9.75 லட்சத்துக்கு அகின் ஜிஎஸ் மற்றும் ரூ.8 லட்சத்துக்கு நவீன் ராஜா ஜேக்கப் இருவரையும் ஒப்பந்தம் செய்துள்ளது. இது குறித்து சென்னை அணி முதன்மை தொழில்நுட்ப அலுவலர் துளசி ரெட்டி கூறுகையில், ‘சிறந்த வீரர்களை ஒப்பந்தம் செய்துள்ளோம். ஏலத்தின்படி இந்த லீகில் நமது அணி மிகவும் வலுவானதாக அமைந்துள்ளது’ என்றார். இந்த தொடர் சோனி நெட்வொர்க் சேனல்களில் நேரடியாக ஒளிபரப்பாக உள்ளது. மொத்தம் 24 ஆட்டங்கள் இடம் பெறும் இந்த லீக் போட்டிக்கான அட்டவணை விரைவில் வெளியாக உள்ளது.

Related Stories: