திருப்போரூர் விவசாயிகளுக்கு பயிர் விளைச்சல் போட்டி

திருப்போரூர்: திருப்போரூர் வட்டார வேளாண் துறை உதவி இயக்குனர் ஜெ.ரவீந்திரா வெளியிட்டுள்ள அறிக்கை. செங்கல்பட்டு மாவட்ட அளவில் பாரம்பரிய நெல் சாகுபடி செய்து, அதிக மகசூல் பெற்று முதல் 3 இடங்களை பெறும் விவசாயிகள் 3 பேருக்கு, முதல் பரிசாக ரூ.1 லட்சம், 2ம் பரிசாக ரூ.75 ஆயிரம், 3ம் பரிசாக ரூ.50 ஆயிரம் வழங்கப்பட உள்ளது. இந்த போட்டியில் கலந்து கொள்ள குறைந்தது 50 சென்ட் நிலப்பரப்பில், பாரம்பரிய நெல் சாகுபடி செய்யப்பட்டு இருக்க வேண்டும். இதற்கான பதிவு கட்டணம் ரூ.100 செலுத்த வேண்டும். அறுவடை தேதியை 15 நாட்கள் முன்னதாக தெரிவிக்க வேண்டும். அறுவடைக்கு பிறகு தானியத்தின் மாதிரியை சேகரித்து அலுவலகத்தில் வழங்க வேண்டும். விவசாயி கடைபிடிக்கும் தொழில்நுட்பங்கள் குறித்து உரிய ஆவணங்களுடன் விளக்க வேண்டும். இந்த விளைச்சல் போட்டியில் வெற்றி பெறும் சிறந்த விவசாயிக்கு பாரம்பரிய நெல் பாதுகாவலர் விருது, ரொக்கப்பரிசு வழங்கப்படும். எனவே, விவசாயிகள் இந்த போட்டியில் கலந்துக் கொண்டு வெற்றி பெற திருப்போரூர் வேளாண் அலுவலகத்தில் பதிவு செய்ய வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

Related Stories: