×

ஆஷஸ் 2வது டெஸ்ட் நாளை தொடக்கம்: வார்னர் ஆடுகிறார்

அடிலெய்ட்: ஆஸ்திரேலியா - இங்கிலாந்து அணிகள் இடையே 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடர் ஆஸ்திரேலியாவில் நடந்து வருகிறது. இதில் பிரிஸ்பேனில் நடந்த முதல் டெஸ்ட்டில் ஆஸ்திரேலியா 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்நிலையில் 2வது டெஸ்ட் பகலிரவு போட்டியாக அடிலெய்டில் நாளை தொடங்குகிறது. இந்திய நேரப்படி நாளை காலை 9.30 மணிக்கு போட்டி தொடங்கி நடைபெறும். இதற்காக ஆடும் லெவனை ஆஸ்திரேலியா அறிவித்துள்ளது.

காயத்தில் இருந்து மீண்டுள்ள வார்னர் நாளை களம் இறங்குகிறார். காயத்தால் விலகிய ஹேசல்வுட்டிற்கு பதிலாக ரிச்சர்ட்சன்  சேர்க்கப்பட்டுள்ளார். 3 ஆண்டுக்கு பின் அவர் டெஸ்ட்டில் களம் இறங்குகிறார். ஆஸி. அணி விபரம்: மார்கஸ் ஹாரிஸ், டேவிட் வார்னர், மார்னஸ் லாபுசாக்னே, ஸ்டீவ் ஸ்மித், டிராவிஸ் ஹெட், கேமரூன் கிரீன், அலெக்ஸ் கேரி (வி.கீ), பாட் கம்மின்ஸ் (கேப்டன்), மிட்ச் ஸ்டார்க், நாதன் லியான், ஜே ரிச்சர்ட்சன்.


Tags : Ashes ,Warner , Ashes Test Series, Warner
× RELATED வெஸ்ட் இண்டீசுடன் முதல் டி20 11 ரன் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா வெற்றி