×

மகளிர் 50 ஓவர் உலக கோப்பை: இந்தியா- பாகிஸ்தான் மார்ச் 6ம் தேதி மோதல்

துபாய்: ஐசிசி 50ஓவர் மகளிர் உலக கோப்பை கிரிக்கெட் தொடர் அடுத்த ஆண்டில் நியூசிலாந்தில் மார்ச் 4ம்தேதி முதல் ஏப்.3ம்தேதி வரை நடைபெற உள்ளது. இதில் இந்தியா , ஆஸ்திரேலியா, தென்ஆப்ரிக்கா, வெஸ்ட்இண்டீஸ், பாகிஸ்தான், இங்கிலாந்து, தென்ஆப்ரிக்கா , வங்கதேசம் ஆகிய அணிகள் பங்கேற்கின்றன. இதற்கான அட்டவணை இன்று வெளியிடப்பட்டது. மார்ச் 4ம் தேதி நடைபெறும் முதல் போட்டியில் நியூசிலாந்து-வெஸ்ட்இண்டீஸ் அணிகள் மோதுகின்றன.ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒருமுறை மோதும்.

இதில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள்  அரையிறுதிக்கு தறுதி பெறும். இறுதிபோட்டி ஏப்ரல் 3ம் தேதி கிறிஸ்ட்சர்ச்சில் நடைபெற உள்ளது. இந்திய அணி தனது முதல் போட்டியில் பாகிஸ்தானை  மார்ச் 6ம்தேதி சந்திக்கிறது. மார்ச் 10ம் தேதி நியூசிலாந்து, 12ம் தேதி வெஸ்ட்இண்டீஸ், 16ம் தேதி இங்கிலாந்து, 19ம்தேதி ஆஸ்திரேலியா,22ம்தேதி வங்கதேசம், 27ம்தேதி தென்ஆப்ரிக்காவுடன் மோத உள்ளது.


Tags : World Cup ,India ,Pakistan , Women's World Cup, India, Pakistan
× RELATED நரேந்திர மோடி மைதானத்தில்...